செய்திகள்!:
#BREAKING
பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
28ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து!
வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லை: தமிழ்நாடு அரசு
பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் துவக்கம்!
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.
கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
28-1-2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது.
- தமிழ்நாடு அரசு.
கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1 முதல் திறப்பு.
- தமிழக அரசு