உயர்நீதி மன்ற இணையதள பக்கத்தில் நகல் பரிசோதகர் (Examiner) ,முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr) , இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff) , கட்டளை எழுத்தர் (Process Writer), ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator), Lift Operator, Process Server , Reader ஆகிய பணிகளுக்கு மொத்தம் 1412 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கவே வேண்டும். தகுதி மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வேலைக்கான காலியிட விவரங்கள் :
கல்வித் தகுதி :
அனைத்து பதவிகளுக்கும், எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) உயர்நிலைப் படிப்புகளில் (அல்லது) கல்லூரிப் படிப்புகளில் சேருவதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Xerox Operator பதவிக்கு மட்டும் கூடுதலாக ஜெராக்ஸ் இயந்திரத்தை இயங்குவதில் 6 மாதங்களுக்கு முன்னனுபம் இருக்க வேண்டும்.
ஓட்டுநர் பதவிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 22.08.2022
தேர்வுக் கட்டணம்: ஓட்டுநர் பதவிக்கு: ரூ.50, மற்ற அனைத்து பதவிகளும்: ரூ.550 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
| வேலையின் பெயர் | காலியிட விவரங்கள் | ||||||||||||||||
| நகல் பரிசோதகர் (Examiner) | 118 | ||||||||||||||||
| முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr) | 302 | ||||||||||||||||
| இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff) | 574 | ||||||||||||||||
| கட்டளை எழுத்தர் (Process Writer) | 3 | ||||||||||||||||
| ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator) | 267 | ||||||||||||||||
| Lift Operator | 9 | ||||||||||||||||
| Process Server | 41 | ||||||||||||||||
| Reader | 39 | ||||||||||||||||
| காலியிடங்கள் | 1412 |
ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் செய்வது எப்படி: இணைய வழி விண்ணப்பங்கள் https://www.mhc.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வின் தன்மை: பகுதி – I, தமிழ் மொழி தகுதித்தேர்வு - 50 வினாக்கள் பகுதி – II, பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு - 100 வினாக்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத் தேர்வின் பகுதி I மற்றும் பகுதி II ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற, மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள். இடஒதுக்கீட்டு வீதியைப் பின்பற்றி, தகுதிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்படுவர். அறிவிப்பு விவரம் https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMP2022/districtList.jsp?notificationLink=link1https://www.mhc.tn.gov.in/recruitment/loginhttps://jrchcm2022.onlineregistrationform.org/MHCMPDOC/notification1_link1district=2_Tamil.pdf இந்த பக்கத்தை காணவும். மாவட்ட வாரியாக காலியிடங்கள் உள்ளது. உங்களுக்கு தேவையான மாவட்டத்தை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும் .









