திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாள் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இது தவிர கல்யாணம் உற்சவம், கட்டணபிறமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகளில் பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே காணொளி மூலம் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்க தேவையான டிக்கெட்டுகளும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.