நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைக்க விரும்புபவர்கள் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அந்நோயின் தாக்கத்தினை குறைக்கலாம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை நீங்கள் தினமும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் டைப்-2 வகை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம். உங்கள் உணவில் தினமும் பச்சை காய்கறிகள் மற்றும் பச்சை கீரைகளை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பச்சை காய்கறிகளில் சல்ஃபரோபென் உள்ளது, ஐசோதியோசயனின் ஒரு வகை தான் இந்த சல்ஃபரோபென். இது நம் உடலிலுள்ள ரத்த சர்க்கரையை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
நட்ஸ் வகைகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, இவை நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு 50கிராம் அளவு நட்ஸ் வகைகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிப்பதோடு நீரிழிவு நோயின் தாக்கமும் குறைகிறது. புரோட்டீன், நார்சத்து, மினரல்ஸ் மற்றும் மெக்னீசியம் கலந்த பீன்ஸ், பட்டாணி போன்ற பருப்பு வகைகளை சாப்பிடுவது ரத்த சுரக்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் செரிமான மண்டலம் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பிக்கிறது. ஆளி விதைகள், பூசணிக்காய் விதைகள் மற்றும் ஷியா விதைகள் போன்ற விதைகளில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கூடிய திறன் உள்ளது. அதனால் தினமும் இதுபோன்ற விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.









