சென்னை : பள்ளி காலாண்டு தேர்வு, நாளை துவங்க உள்ளது. ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு, நாளை துவங்க உள்ளது.
இந்த தேர்வுகள், ஒவ்வொரு மாவட்டத்திலும், பாட வாரியாக தனித்தனியே கால அட்டவணை தயாரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. வரும், 30ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து, அக்., 1 முதல் விடுமுறை விடப்படுகிறது. மீண்டும், அக்., 6ல் பள்ளிகளை திறக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. விடுமுறைகளில் மாற்றம் இருந்தால், தேர்வு முடியும் போது அறிவிக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.