இந்த பத்து அறிகுறி இருந்தால் கிட்னி செயலிழந்து விடும்! உங்களுக்கு உள்ளதா தெரிந்து கொள்ளுங்கள்!
மக்களுக்கு உடலில் பல நோய்கள் இருப்பினும் அதிகப்படியானோர் பாதிக்கப்படுவது இந்த சிறுநீரக பிரச்சனை தான். பலருக்கும் நீர் கடுப்பு சிறுநீர் பாதையில் தொற்று என பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் நம் ஆரம்ப கட்ட காலத்திலேயே அஜாக்கிரதையாக இருப்பது தான். குறிப்பாக ஒரு நாளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கிட்னி பிரச்சனையால் பாதிப்படைகின்றனர்.
மருத்துவர் ரீதியில் ஒரு நாளில் மட்டும் 3000 பெயருக்கு டயாலிசிஸ் செய்வதாக கூறுகின்றனர். அந்த வகையில் நாம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை அறிந்து முன்கூட்டியே அதனை சரி செய்து கொள்வதால் பெரிய பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இந்த பத்து அறிகுறிகள் இருந்தால் உடனே நீங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
முதலாவதாக சிறுநீரகத்தில் நிறம் மாறுபட்டாலோ அல்லது சிறுநீரகத்தில் இருந்து அதிக அளவு துர்நாற்றம் வீசினாலும் உங்களது கிட்னி ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்.நமக்கு சிறுநீரகத்தில் அதீத பிரச்சனை இருந்தால் பசியின்மை காணப்படும். நாக்கில் சுவை சிறிதும் தெரியாது.
அதேபோல கிட்னி பழுதாகவும் சமயத்தில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையில் மாறுபாடு ஏற்படுவதால் சிறிது வேலை செய்தால் கூட அதீத சோர்வு ஏற்படும்.
வெப்பநிலை அதிகமாக இருந்த போதிலும் நமது உடல் குளிர்ச்சியாக இருப்பது போல் தோன்றினால் கிட்னி செயலிழக்க போகிறது என்று அர்த்தம்.
அதேபோல நமது அந்தரங்க உறுப்பில் தொற்று மற்றும் ஏதேனும் அரிப்பு இருந்து கொண்டே இருந்தாலும் நாளடைவில் அது ஆபத்தில் கொண்டு வந்து விடும்.
தொடர்ந்து சிறுநீர் வந்து கொண்டே இருந்தாலும், வரவேண்டிய நேரத்தில் வராமல் போனாலும், அதன் நிறம் மாறினாலும் கிட்னி ஆபத்தான நேரத்தை நெருங்குகிறது என்று அர்த்தம்.