ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் பயணம் செய்வார்கள். மேஷ ராசியில் ராகுவும் துலாம் ராசியில் கேதுவும் பயணம் செய்யும் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்று நட்சத்திரங்களில் பயணம் செய்வார்கள்.
ராகு பகவான் இப்போது பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ராகுவின் பயணமும், கேதுவின் பயணமும் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது என்று பார்க்கலாம்.
ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், ராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும்பாம்பு என அழைக்கப்படும். ராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன் ஆவர். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை தாக்கம் அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும் கிரகங்களின் காரகத்துவங்களிலும் தாக்கம் ஏற்படும்.
நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களான இராகு - கேதுவுக்கு என தனியாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை. எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டு அதிபதியின் குணத்தை கிரகித்துக் கொள்வர். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே இராசி மண்டலத்தை வலம் வரக் கூடியவர்கள்.
மேஷம்
ஜென்ம ராசியில் ராகு பயணம் செய்கிறார். கண் நோய் நீங்கும், பல் சம்பந்தமான நோய்கள் நீங்கும். மூல வியாதி குணமாகும். கணவன் அல்லது மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திருமண காரியங்கள் தடைபடும். சமூக தொடர்புர்களில் சிக்கல்கள் உண்டாகும். ஏழாம் வீட்டில் கேது பயணம் செய்கிறார். தொழில் வகை கூட்டாளிகளுடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகும். உடலில் வலி உண்டாகும். நோய் நொடிகளால் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். தெய்வ நம்பிக்கை குறையும்.
ரிஷபம்
மனதில் இருந்து வந்த இனம் புரியாத பயம் நீங்கும். நோய்கள் நீங்கும், மனதில் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நல்ல தூக்கம் வரும். உடலில் தெம்பு உண்டாகும். எதிரிகளின் கொட்டம் அடங்கும். கடன் தொல்லைகள் குறையும். தாய்மாமனுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பாதத்தில் வலி உண்டாகும். கணவன் அல்லது மனைவியுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணத்தடைகள் நீங்கும். தொழில் வகை கூட்டாளிகளுடன் இணக்கம் உண்டாகும். சமுகத்தொடர்புகள் அதிகரிக்கும். கெட்ட கனவுகள் வரும்.
மிதுனம்
வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும். குழந்தைகளால் மன வருத்தம் உண்டாகும். காதல் சம்பந்தமான தகராறுகள் உண்டாகும். குல தெய்வ வழிபாடு தடைபடும். எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். ஆசைகள் நிறைவேறும். அண்ணன், அக்கா இவர்களுக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.
கடகம்
குழந்தைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். காதலுக்கு இருந்துவந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில் தடைகள் உண்டாகும். கல்வியில் தடை உண்டாகும். நிலம் ,வீடு சம்பந்தமான சிக்கல்கள் வரும். வீடு, வாகனங்கள் அமைவதில் தடைகள் உண்டாகும். மாமியாருக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். சட்டத்திற்கு புறம்பான தொழில்களில் ஈடுபட நேரிடும். கால்களில் வலி உண்டாகும். தாயுடன் கருத்துவேறுபாடு உண்டாகும்.
சிம்மம்
வீடு, நிலம் தொடர்பான தடைகள் நீங்கும். அம்மா உடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கல்வித்தடை நீங்கும். தம்பி,தங்கைகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சிறு தூர , நெடுந்தூர பயணங்கள் உண்டாகும். தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். ஆலய தரிசனம் மன அமைதி தரும்.
கன்னி
தம்பி, தங்கைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணத்தடைகள் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மனைவி அல்லது கணவன் மூலம் எதிர்பாரத பண வரவுகள் உண்டாகும். கணவன் அல்லது மனைவிக்கு பல், கண் சம்பந்தமான நோய்கள் வரும்.
துலாம்
தடைபட்ட பணவரவுகள் திரும்ப வர ஆரம்பிக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆயுள் பயம் நீங்கும். உடலில் சோம்பலும், மனச்சோர்வும் உண்டாகும். எதிலும் ஆர்வம் இருக்காது. கணவன் அல்லது மனைவிக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். வேற்று மதம், வேற்று ஜாதியினருடன் அன்னியர்களுடன் புதிய தொடர்புகள் உண்டாகும்.
விருச்சிகம்
உடலில் இருந்து வந்த சோம்பலும் , மனச்சோர்வும் நீங்கும். உடலில் தெம்பும் ,உற்சாகமும் உண்டாகும். கணவன் அல்லது மனைவிக்கு உடல் நலம் சீரடையும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். அயல் நாட்டு பயணங்கள் தடைபடும். சித்தர் சமாதிகளின் தரிசனம் உண்டாகும். தியானம் பழகுவதில் நாட்டம் உண்டாகும். தெய்வீக கனவுகள் வரும். பாதத்தில் வலி உண்டாகும்.
தனுசு
குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். தெய்வ நம்பிக்கைகள் குறையும். பாத வலி நீங்கும். வெளி நாடு பயணம் சம்பந்தமான தடைகள் நீங்கும். ஆசைகள்,விருப்பங்கள் நிறைவேறுவதில் தடைகள் உண்டாகும். வயிறு சம்பந்தமான நோய்கள் வரும். அண்ணன், அக்கா இவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எதிரிகளின் பலம் அதிகரிக்கும்.
மகரம்
தொழில் தடைகள் உண்டாகும்., உத்யோகத்தில் பிரச்சினைகள் உண்டாகும், காலில் நரம்பு தளர்ச்சி ஏற்படும், மாமியாருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். நண்பர்களிடம் நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும். உங்கள் விருப்பங்கள் இனி தடையின்றி நிறவேறும். தாய்க்கு மருத்துவ செலவுகள், வண்டி வாகனங்கள் அடிக்கடி பழுதடையும். வீட்டுக்கு பழுது நீக்கி செப்பனிடும் செலவுகள் உண்டு. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வயிறு சம்பந்தமான நோய்கள் விலகும்.
கும்பம்
தொழில், உத்யோகத்தில் தடைகள் நீங்கும். தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் கிடைக்கவேண்டிய உதவிகள் கிடைக்காது. தம்பி, தங்கைகளுக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். சிறு தூர, நெடுந்தூர பயணங்கள் தடைபடும். தைரியக்குறைவு உண்டாகும். கைகளில் வலி உண்டாகும். காது சம்பந்தமான நோய்கள் தொல்லை தரும். தெய்வ காரியங்கள் தடையின்றி நடைபெறும்.
மீனம்
கணவன் அல்லது மனைவி மூலம் வரும் பண வரவுகள் தடைபடும். மூல வியாதி, கண் நோய், பல் வலி போன்ற வியாதிகள் வரும். தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனோ தைரியும் உண்டாகும். பயணத்தடைகள் நீங்கும். எதிர்பாராத வகையில் திடீர் பண வரவுகள் உண்டு. தடைபட்ட தெய்வ காரியங்கள் நிறைவேறும்.
ராகு கேது பெயர்ச்சி பரிகாரங்கள்
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சிவன் கோவில் பிரார்த்தனை நல்லது. திருநாகேஸ்வரம், சங்கரன் கோவில் ஆகிய திருத்தல வழிபாடுகள் சிறப்பு. புற்று உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டால் ராகுவினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். ஞாயிறு தோறும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கலாம். சனிக்கிழமை அனுமனுக்கு துளசிமாலை சாற்றி வணங்கலாம்.









