உதவியாளர்,
இளநிலை பொறியியாளர், சுருக்கெழுத்தாளர் போன்ற பல்வேறு பணிகளில் காலியாக
உள்ள 5,043 காலி இடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய உணவுக் கழகம்
(Food Corporation of India) வெளியிட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். -
காலியிடங்கள்: 5043
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பங்கள் பெறப்படும் நாள்: 06.09.2022 காலை 10 மணி முதல்
சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் : 05.10.2022 மாலை 4 மணி வரை
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: பின்னர் வெளியிடப்படும்.
பொது நிபந்தனைகள்: நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் 6 (தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு) மண்டலங்களில் இந்த ஆள் சேர்க்கை நடைபெற இருக்கிறது.
ஒவ்வொரு மண்டலத்திலும், இளநிலை பொறியியாளர் சிவில் (A);
இளநிலை பொறியியாளர் - எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் (B); சுருக்கெழுத்தாளர் நிலை- 2 (C); உதவியாளர் நிலை III - பொது (D); உதவியாளர் நிலை III- கணக்கு (E); உதவியாளர் நிலை III - டெக்கினிக்கல் (F); உதவியாளர் நிலை III- உணவு தானிய கிடங்குகள் (G); உதவியாளர் நிலை III (இந்தி) - H ஆகிய பதிவுகள் நிரப்பப்பட உள்ளன.
தென் மண்டலத்தில் 989 காலியிடங்கள்
டெல்லி,பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டத்தில் 2388 காலியிடங்களும்; தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டத்தில் 989 காலியிடங்களும்; பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்தில் 768 காலியிடடங்களும்; குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் 713 காலியிடங்களும்; அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு மண்டலத்தில் 185 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு மண்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு காலிப்பதவிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இளநிலை பொறியியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 28-க்கு கீழ் இருக்க வேண்டும். சுருக்கெழுத்தாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 25-க்கு கீழ் இருக்க வேண்டும். உதவியாளர் நிலை-III பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 27-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
கல்வி: உதவியாளர் நிலை- III பொது & உணவுத் தானிய கிடங்குகள் பதவிக்கும், சுருக்கெழுத்தாளர் பதவிக்கும் உயர்கல்வியில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பதவிகளுக்கு தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தெரிவு செய்யப்படும் முறை: இரண்டு கட்டங்களாக நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.