சேலம் அடுத்த எருமாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக செந்தில்குமார் உள்ளார்.
இவர் பாடம் நடத்தாமல் மெத்தனமாக இருந்ததாக புகார் எழுந்தது. பள்ளிக்கு
நேரடியாக சென்ற சிஇஓ முருகன் விசாரணை நடத்தி செந்தில்குமாரை சஸ்பெண்ட்
செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,
'எருமாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு மற்றும் 10ம்
வகுப்புகளுக்கு செல்லும் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார், மாணவர்களுக்கு
சரிவர பாடம் நடத்தாமல் மெத்தனமாக இருந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கேட்டபோது, அவரிடம் வாக்குவாதத்தில்
ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். மேலும், வெளிஆட்கள் மூலம் மிரட்டல்
விடுத்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து சிஇஓ
உத்தரவிட்டுள்ளார்,' என்றனர்.