தேங்காய் எண்ணெயில் பல பயனுள்ள பண்புகள் உள்ளன. அதன் ஆரோக்கிய பண்புகள் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்ததே.
அந்த வரிசையில் தேங்காய் எண்ணெய் பற்களை சுத்தம் செய்வதற்கும் மிகவும்
பயனுள்ளதாக கருதப்படுகிறது. பற்களை சுத்தப்படுத்தவும், வெண்மையாக்கவும்,
வாய் துர்நாற்றத்தைக் குறைக்கவும், ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்
தேங்காய் எண்ணெய் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஆரோக்கிய பண்புகள் :
தேங்காய் எண்ணெயில் கொழுப்பு மற்றும் லாரிக் அமிலம் உள்ளது. இது கார்பன் ட்ரைகிளிசரைடு கொண்டுள்ளது. தேங்காய் எண்ணெயில் பால்மிடிக் மற்றும் மிரிஸ்டிக் அமிலங்களும் உள்ளன.
பற்களுக்கு தேங்காய் எண்ணெய்
ஹெல்த் லைன் படி, தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. லாரிக் அமிலம் மற்றும் மோனோலாரின் ஆகியவை நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேங்காய் எண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பாக்டீரியா போன்றவற்றிலிருந்து வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ஏனெனில் இந்த பாக்டீரியாக்கள் தான் பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
எப்படி உபயோகிப்பது..?
பொதுவாக அனைவரின் வீட்டிலும் தேங்காய் எண்ணெய் இருக்கும். குறிப்பாக சருமம் சார்ந்த குறிப்புகளுக்கு பெரும்பாலும் வெர்ஜின் தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே சமையலுக்கு பயன்படுத்தப்படும் சாதாரண தேங்காய் எண்ணெயை அதிகாலையில் ஆயில் புல்லிங் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம். இது வாய்வழி சுகாதார ஆரோக்கியத்திற்கு நல்லது, இது உங்கள் பற்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.