பாரத ஸ்டேட் வங்கியில் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவில்) காலியாக உள்ள 5008 இளநிலை அசோசியேட்ஸ்ட்ஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து, செப்., 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)
மேலாண்மை : மத்திய அரசு
பணி விவரம்
Junior Associate
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - 5008
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.09.2022
கல்வி தகுதி
ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்கக் வேண்டும்.
வயது வரம்பு
1.8.2022 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்கக் வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்குக்
சலுகைகள் வழங்கப்படும்.
சம்பளம்
மாதம் ரூ.17,900 - 47,920
தேர்வு செய்யப்படும் முறை
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எங்கெங்கு பணி
குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள எஸ்பிஐ அலுவலகங்களில், தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் காலிப் பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு மாநிலத்தில் உள்ள பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு எப்போது
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்
நவம்பர், 2022 இல் நடைபெறும்.
முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்
டிசம்பர், 2022 இல் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்
தமிழ்நாட்டில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும்.
என்ன மொழியில் வினாத்தாள்
தேர்வு வினாத்தாள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் இருக்கும்.
தமிழகத்துக்கு எவ்வளவு ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 355 ஆகும். இதில், 153 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 96 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கும், 35 இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கும், 67 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 4 இடங்கள் பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பக் கட்டணம்
கட்டணம் ரூ.750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள்
ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
www.bank.sbi/careers என்ற முகவரியில் பதிவு செய்யவும். பதிவு செய்த பின்னர் www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் அதனை
பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.09.2022
மறக்காதீங்க... மூன்று நாள் தான் இருக்கு...! கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, கைவசம் இருக்கும் கால அவகாசத்தில் விண்ணப்பித்து, சர்வர் வேளை செய்யலங்கனு புலம்பாமல் பார்த்துக்கோங்க...!
அதிகாரப்பூர்வ இணையதளம்/ தேர்வு, பணி அறிவிப்பு, அறிய... க்ளிக் ப்ளீஸ்...!