SBI வங்கி பயனரா நீங்கள்? நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய தகவல் – முழு விவரம் உள்ளே!

ஆதார் எண்ணை நமது வங்கி கணக்குடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், உங்கள் SBI வங்கி கணக்கில் ஆதாரை இணைப்பதற்கான பல வழிகளை இந்த பதிவில் காணலாம்.

ஆதார் இணைப்பு:

ஆதார் அட்டை மத்திய அரசு, நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ள தனித்துவமான எண்களை உள்ளடக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இதில், தனிப்பட்ட நபரின் பயோமெட்ரிக் தகவல்கள் முதல் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் ஆதார் அட்டை தான் முக்கிய ஆவணமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால் வாக்காளர் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்கு போன்ற மற்ற அனைத்து ஆவணங்களையும் ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், அரசின் மானியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை SBI கணக்கில் மூலமாக தான் மக்கள் பெற முடியும். அதனால், எஸ்பிஐ வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டியது அவசியமாகும். இதற்கான வழிமுறைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறை:
  • எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.onlinesbi.com செல்ல வேண்டும்.
  • உங்கள் இணைய வங்கி கணக்கில் உள்நுழையவும்.
  • இப்பொழுது, “இ-சேவைகள்” பிரிவில் கிளிக் செய்யவும்.
  • வங்கி கணக்குகளுடன் ஆதாரை புதுப்பிக்கவும் (CIF)” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்களின் password ஐ உள்ளிட்டு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது கீழ்தோன்றும் மெனுவிலிருந்து உங்கள் CIF எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் ஆதார் எண்ணை இரண்டு முறை உள்ளிட்டு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்களின் SBI வங்கிக் கணக்குடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.

ATM மூலம் SBI வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கும் முறை:

  • அருகிலுள்ள SBI ATM க்கு செல்ல வேண்டும்.
  • உங்கள் கார்டை ஸ்வைப் செய்து உங்கள் பின்னை உள்ளிடவும்.
  • “சேவை பதிவு” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்போது “ஆதார் பதிவு” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • சேமிப்பு அல்லது நடப்பு கணக்கா என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • உறுதிப்படுத்துவதற்காக உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் உள்ளிடவும்.
  • உங்கள் கோரிக்கை வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • இனி, உங்கள் ஆதார் உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும்.

SBI YONO ஆப் மூலம் எஸ்பிஐ வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கும் முறை:

  • எஸ்பிஐ யோனோ அல்லது எஸ்பிஐ யோனோ லைட் மொபைல் செயலியில் உள்நுழைய வேண்டும்.
  • விரைவு இணைப்புகளின் கீழ் ‘சேவை கோரிக்கை’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து, ‘சுயவிவரம்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • ‘ஆதார் இணைப்பு’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
  • உங்களின் 12 இலக்க ஆதார் எண் உட்பட தேவையான விவரங்களை உள்ளிடவும்.
  • உங்கள் கோரிக்கை செயல்படுத்தப்பட்டுவிட்டதாகவும், உங்கள் ஆதார் எண் உங்கள் வங்கிப் பதிவுகளுடன் இணைக்கப்பட்டதாகவும் செய்தி உங்களுக்கு அனுப்பப்படும்.

SMS மூலம் எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான முறை:

  • முக்கியமாக, இதற்கு வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்த மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
  • முதலில், UID<இடம்>ஆதார் எண்>கணக்கு எண்> என்ற வடிவமைப்பில் ஒரு செய்தியை 567676 க்கு அனுப்பவும்.
  • இப்பொழுது, ஆதாரை வெற்றிகரமாக பதிவு செய்ததற்கான உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.
  • உங்கள் மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால், அதைக் குறிப்பிடும் செய்தியைப் பெறுவீர்கள்.