சனி பார்வை சிலருக்கு சங்கடத்தை தரும்.. சில ராசிக்காரர்களுக்கு யோகத்த தரும். அதே போல குரு பார்வை கிடைக்கும் ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும்.
2023ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் மீன ராசியில் சில மாதங்களும், மேஷ ராசியில் 8 மாதங்களும் பயணம் செய்வார். மிக முக்கியமான இந்த இரண்டு கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கும். அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கு பலவித மாற்றங்களைத் தரப்போகிறது. நவ கிரகங்களின் பயணம் சில ராசிக்காரர்களுக்கு சின்னச் சின்ன சங்கடங்களையும் தரலாம். அதை தவிர்க்க ஆலய தரிசனம் செய்வது பாதிப்புகளை குறைக்கும்.
2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு பகவான் மே மாதம் வரை மீன ராசியில் பயணம் செய்கிறார். மே மாதத்திற்குப் பிறகு மேஷ ராசிக்கு வந்து அமர்கிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.
மேஷ ராசிக்காரர்களுக்கு இனி எல்லாம் யோக காலம்தான். பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். விலகியவர்கள் ஒன்று கூடுவார்கள். கடந்த ஆண்டுகளில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து பலவித படிப்பினைகளையும் பாடங்களையும் கற்றுக்கொண்டீர்கள். ஜாக்பாட் அடிக்கக் கூடிய ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமைந்துள்ளது.
லாப சனி
2023ஆம் ஆண்டில் லாப சனி நிறைய லாபத்தை அள்ளித்தரப்போகிறார். பொருளாதார ரீதியாக உயர்வு வரப்போகிறது. கஷ்டங்கள், கவலைகள் நீங்கப்போகிறது. நல்ல தன வரவு வரப்போகிறது. அரசுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். கை கூடி வரும். நல்ல வரன் தேடி வரும். காதல் கலப்புத்திருமணம் கைகூடி வரும். பெண்களுக்கு மனம் போல மாங்கல்யம் அமையப்போகிறது.
குரு + ராகு கூட்டணி
ராசியில் உள்ள ராகு உடன் குரு இணையும் போது குரு சண்டாள யோகம் ஏற்படப்போகிறது. பிரம்மாண்டமாக பணம் வரப்போகிறது. அதற்கான வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. கூட்டுத் தொழில் சிறப்படையும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இணக்கம் ஏற்படும். நல்ல வேலை கிடைக்கும். உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வேலையில் புரமோசன் கூடி வரப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மிகப்பெரிய புகழும் செல்வமும் செல்வாக்கும் தேடி வரப்போகிறது.
நல்ல செய்தி தேடி வரும்
பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரப்போகிறது. முதலீடுகள் அதிகரிக்கும் வங்கியில் சேமிப்பு கூடும். கல்விக்காகவும் வேலைக்காகவும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது.
ரிஷபம்
2023ஆம் ஆண்டு முன்னேற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. நினைத்தது நடக்கப்போகிறது. வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் கூடி வரப்போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரப்போகிறது. காதல் வாழ்க்கையில் உற்சாகம் கூடும். மனதில் நினைத்த பெண்ணையோ, பையனையோ திருமணம் முடிப்பீர்கள். கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் ஏற்படலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் ஆண்டு முற்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு வருவதால் நிறைய செலவுகள் அதிகரிக்கும்.
பண வருமானம் அதிகரிக்கும்
வாழ்க்கைத்துறையை அனுசரித்து செல்லுங்கள். அரசுத்துறையில் வேலை செய்பவர்களுக்கு சில சங்கடங்கள் வர வாய்ப்பு உள்ளது கூடுதல் கவனம் தேவை. வேலை செய்பவர்கள் கவனமாக இருக்கவும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். கிடைக்கும் வேலையை உற்சாகமாக ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நோய்கள் நீங்கும் ஆண்டாக அமைந்துள்ளது. மகிழ்ச்சியைத் தரக்கூடிய மண வாழ்க்கை அமையும் ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமைந்துள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே.. 2023 ஆண்டு சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கக்போகிறது. காரணம் அஷ்டமத்து சனி விலகப்போகிறது. குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரப்போகிறது. லாப ஸ்தானத்தில் உள்ள ராகு உடன் குருவும் இணைவதால் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. வெளிநாட்டு வியாபாரம் வெற்றியையும் லாபத்தையும் தரப்போகிறது. நல்ல முன்னேற்றம் வந்து சேரும். கடந்த காலங்களில் நிறைய சங்கடங்களையும் சண்டைகளையும் சந்தித்தீர்கள். இனி உங்களுக்கு யோகமான காலமாக அமையப்போகிறது. மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது.
குடும்பத்தில் ஒற்றுமை
அலுவலகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. திருமணம் தடை பட்டு வந்த உங்களுக்கு இந்த ஆண்டு மனதிற்குப் பிடித்த வரன் அமையும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் சந்தோஷமும் அதிகரிக்கும். வேலையில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வும் அதிகரிக்கும். நல்ல தன லாபத்தை தரும். பாக்கெட் நிறைய பணத்தை பார்க்கப்போகிறீர்கள். பெண்களுக்கு அற்புதமான ஆண்டு பொன் நகை வாங்குவீர்கள்.
பொற்காலம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது இருப்பதால் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. வீண் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பெண்கள் பாதுகாப்பில் அக்கறை காட்டுங்கள். ஆன்மீக பயணம் செல்வீர்கள். பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்க வளர்ச்சி தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். வீடு கட்டு யோகம், சொத்து வாங்கும் யோகம் கை கூடி வரப்போகிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக 2023ஆம் ஆண்டு அமைந்துள்ளது.