| பணியின் பெயர் | கிராம உதவியாளர் |
| மொத்த இடங்கள் | 2748 |
| சம்பளம் | ரூபாய் 11,100 - 35,100 வரை |
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பு:
- பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
- பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/முஸ்லிம்கள் 21 வயதில் இருந்து 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- எஸ்.சி/அருந்ததியர்/எஸ்.டி ஆகியோர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான தகுதி:
- குறைந்தபட்சம் 5ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
- சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
- பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட கிராமம் அல்லது தாலுக்காவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
www.tn.gov.inஎன்ற இணையதளத்தில் what's new பகுதியில் கிராம உதவியாளர் பணிக்கான ஆன்லைன் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதர விவரங்கள் அதில் இடம்பெற்று இருக்கும்.
பணிக்கான தேர்வு:
கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் கிராம நிர்வாகம் தொடர்பான கட்டுரை எழுத வேண்டும். பின்பு நேர்முகத் தேர்வில் விண்ணப்பதார் கல்வித்தகுதி, இதர சான்றுகள் சரிபார்க்கப்படும். இதில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் : 7.11.2022.









