மனித உடலில் சுமார் 5 டிரில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன என்பது தெரியுமா? அவற்றில் பெரும்பாலான பாக்டீரியாக்கள் வயிற்றில் தான் உள்ளன.
மனித உடலிலேயே வயிறு மிகவும் முக்கியமான உறுப்பாகும். ஒருவரது வயிற்றின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் வயிறு உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்குவது முதல் ஹார்மோன் அளவுகளை சமநிலையில் பராமரிப்பது வரை பல முக்கியமான பணிகளை வயிறு செய்கிறது.
ஆனால் தற்போதைய நமது வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கங்களால் வயிற்றின் ஆரோக்கியம் நம்மை அறியாமலேயே மோசமாக பாதிக்கப்படுகிறது என்பது தெரியுமா? அதுவும் இந்த மோசமான பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், புற்றுநோய் போன்ற கொடிய மற்றும் ஆபத்தான நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே வயிற்றின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க எந்த மாதிரியான பழக்கங்களை உடனே கைவிட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இப்போது வயிற்றின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் பழக்கங்கள் என்னவென்பதைக் காண்போம்.
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உடலுக்கு போதுமான வேலையைக் கொடுக்க வேண்டும். ஆனால் இன்று பலரது வேலையும் உட்கார்ந்து செய்யக்கூடியவாறு இருப்பதால், உடலுக்கு வேலை கொடுக்க தினமும் உடற்பயிற்சியில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் அனைவரும் தினமும் உடற்பயிற்சி செய்வதில்லை. உடற்பயிற்சி செய்வதால் ஒருவரின் மன அழுத்த அளவு குறைவதோடு, நாள்பட்ட நோய்களின் அபாயமும் குறைகிறது. ஆய்வுகளின் படி, தினமும் உடற்பயிற்சி செய்வது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் உருவாக்கத்திற்கு உதவி, வயிற்றின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.
தூக்கமின்மை
உடல் சீராகவும், ஆரோக்கியமாகவும் இயக்க வேண்டுமானால், உடலுக்கு போதுமான ஓய்வை கொடுக்க வேண்டியது அவசியம். உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்காமல் போனால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பல வழிகளில் பாதிக்கிறது. அதில் ஒன்று தான் வயிற்றின் ஆரோக்கியம் மோசமாவது. நமது குடல் தினமும் ஒரு வழக்கத்தைப் பின்பற்றும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவர் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருக்கும் போது, உடல் கடிகாரம் சீர்குலைந்து, உடலுக்கு மட்டுமின்றி, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
மன அழுத்தம் மற்றும் டென்சன்
இன்று வேலை செய்யும் ஒவ்வொருவரும் தினமும் மன அழுத்தம் மற்றும் டென்சனுடன் இருக்கிறார்கள். இந்த இரண்டுமே உடல் ஆரோக்கியத்தை, குறிப்பாக வயிற்றின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடியது. எப்படியெனில் ஒருவர் அதிக மன அழுத்தம் மற்றும் டென்சனில் இருக்கும் போது, அவர் அதிகளவு உணவை ஒரே வேளையில் உண்ண நேரிட்டு, உணவை ஜீரணிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தி, அஜீரண கோளாறால் அவதிப்பட வைக்கிறது.
அளவுக்கு அதிகமாக மது அருந்துவது
அளவுக்கு அதிகமாக மது அருந்துவது ஒட்டுமொத்த உடலையும் மோசமாக பாதிப்பதோடு, வயிற்றின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், மது அருந்துவதை நிறுத்துங்கள்.
முழு தானிய உணவுகளைத் தவிர்ப்பது
தற்போதைய ஃபாஸ்ட் புட் உணவுகளின் மீதுள்ள மோகத்தால், பலரும் சத்துக்கள் நிறைந்த முழு தானிய உணவுகளை சாப்பிடுவதில்லை. முழு தானிய உணவுகளில் நல்ல செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து அதிகளவில் நிரம்பியிருப்பதால், அவை பல்வேறு வகையான பாக்டீரியாக்களை வயிற்றில் உருவாக்க உதவுகிறது. ஆனால் இந்த வகையான உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமற்ற ஃபாஸ்ட் புட் உணவுகளை உண்பதால், வயிற்றின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்பட்டு பலவித நோய்களுக்கு வழிவகுக்கிறது.
உங்கள் வயிற்றின் ஆரோக்கியம் மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் அபாய அறிகுறிகள்:
மேலே
கொடுக்கப்பட்டுள்ள பழக்கங்களை ஒருவர் தினமும் கொண்டிருந்தால், அவர்களது
வயிற்றின் ஆரோக்கியம் நிச்சயம் மோசமாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும்
இல்லை. ஆனால் நீங்கள் உங்கள் வயிற்றின் ஆரோக்கியம் மோசமாக உள்ளதா என்பதை
தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள்
தெரிந்தால், கு
டல் ஆரோக்கியம் மோசமாக உள்ளது என்று அர்த்தம்.
* வயிற்று உப்புசம்
* அதிகப்படியான சோர்வு அல்லது களைப்பு
* போதுமான தூக்கத்தை மேற்கொள்ள முடியாமல் இருப்பது
* சில உணவுகளுக்கு அதிக சகிப்புத்தன்மை
* சர்க்கரை உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருப்பது
* விவரிக்கமுடியாத எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பது
* சரும எரிச்சல்