அதிக லாபம் கிடைப்பதுடன், நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு உத்தரவாதம் உண்டு என்பதால், எதிர்கால சேமிப்புக்கு திட்டமிடும் உங்களுக்கான சிறப்பான பாலிசியாக ஜீவன் உமாங் திட்டம் இருக்கும்.
பாலிசி காலத்தில் ஒருவேளை பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்த உத்தரவாத தொகையும் வாரிசுதாரருக்கு வழங்கப்படும். 90 நாட்கள் ஆன குழந்தை முதல் 55 வயது வரையிலான நபர்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம். உங்களுக்கு 100 ஆண்டுகள் வரையில் கவரேஜ் தரப்படுகிறது.
ஜீவன் உமாங் பாலிசியில் சேர்ந்து, பிற்காலத்தில் நீங்கள் ரூ.27 லட்சம் பெற வேண்டும் என்றால், இப்போதைய நாளில் இருந்து எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்ற கணக்குகளை இப்போது பார்க்கலாம்.
ஜீவன் உமாங் பாலிசி கணக்கீடு
ஜீவன் உமாங் பாலிசியில் 30 ஆண்டு கால திட்டத்தை உங்களின் பச்சிளம் குழந்தைக்கு நீங்கள் தேர்வு செய்து, மாதந்தோறும் ரூ.1,302 செலுத்தி வருகிறீர்கள் என்றால், 30 ஆண்டுகளில் நீங்கள் ரூ.4.58 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். அதாவது நாள்தோறும் நீங்கள் ரூ.44 என்ற வகையில் முதலீடு செய்தால் போதுமானது. இன்றைய விலைவாசியில் இது 4 அல்லது 3 டீக்கு சமமான தொகை மட்டுமே.
பாலிசி முதிர்வு அடைந்த பிறகு உங்கள் குழந்தைக்கு ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் போனஸ் தொகை கிடைக்கும். குழந்தையின் 100 ஆண்டுகள் வரையிலும் இந்தத் தொகை கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆக, மொத்தம் கிடைக்கும் தொகையை கணக்கு செய்து பார்த்தால் ரூ.27.60 லட்சம் வரும்.
ஒருவேளை உங்கள் குழந்தைக்கு 30 வயது ஆகும்போதே, அதன் எதிர்கால கல்வி அல்லது வேறு ஏதேனும் செலவுகளுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில், அந்த சமயத்திலேயே முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், 30 ஆண்டுகளுக்கு உண்டான போனஸ் தொகை மற்றும் அடிப்படை உத்தரவாத தொகை மட்டுமே கிடைக்கும்.









