நவீன காலத்தில் சர்க்கரை நோய் என்ற நீரழிவு நோய் பிறந்த குழந்தைக்குக் கூட ஏற்படுகிறது. நீரழிவு நோய் வருவதைத் தடுக்க உதவும் முளைக் கட்டிய வெந்தையத்தை பொடி செய்வது எப்படி என பார்க்கலாம்.
பொதுவாகவே
வெந்தயம் உடலை குளிர்ச்சியாக வைக்க, மாதவிடாய் பிரச்சனைக்கு, நீரழிவு
நோய்க்கு எல்லாம் அரு மருந்தாக இருக்கிறது. மேலும், தாய்மார்களுக்கு
வெந்தையம் உட்கொள்ளுவதால் தாய்பால் அதிகம் சுரக்கின்றன.
இப்படியான மருத்துவக் குணங்களைக் கொண்ட வெந்தையத்தை எப்படி முளைக்கட்ட வைத்து பொடி செய்து உண்ணலாம் என்று பார்க்கலாம்.
வெந்தயத்தை 5 மணி நேரம் ஊறவைத்து முதல் நாள் இரவே ஒரு வெள்ளை பருத்தி துணியில் கட்டி வைத்து விட வேண்டும். அடுத்த நாள் முளைவிட்டிருக்கும் அதை நிழல் காய்ச்சலில் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
முளைகட்டிய வெந்தயம் பொடியானது எதிர் ஆக்சிஜனேற்ற மூலக்கூறுகளால் நிரம்பியுள்ளது. இது நம் உடலுக்கு தேவையான சர்க்கரை அளவை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது.
ரத்தத்தில் குளுக்கோஸை விரைவாக உறிஞ்சுவதை தடுக்கிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் வெந்தய பொடியில் இருக்கும் மூலக்கூறுகள் நம் உடலில் இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தி சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. இந்த பொடி நீரழிவு நோயாளிகளுக்கு அந்த வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலங்கள் உதவுவதால் தொடர்ந்து 1 மாதம் வெறும் வயிற்றில் சுடுதண்ணீரில் கலந்து உண்டு வந்தால் நல்ல மாற்றம் தெரிவதை உணரமுடியும்.