அவர் மீன ராசியில் நுழைவதால் ராஜயோகம் உருவாகும். குறிப்பாக இந்த 5 ராசியினருக்கு நினைத்தெல்லாம் நடக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் சந்திரன் 1, 4, 7 மற்றும் 10 ஆம்
வீட்டில் ரிஷபம், துலாம் அல்லது மீனம் ஆகிய இடங்களில் சுக்கிரன்
அமைந்திருந்தால், இந்த ராஜயோகம் உருவாகும். ஐந்து ராசிக்காரர்களுக்கு இந்த
ராஜயோகம் பலன் தரும். பிப்ரவரி 15ம் தேதி முதல் இந்த ராசிகாரர்களுக்கு
அதிர்ஷ்டம் தான்..
மிதுன ராசி: சுக்கிரன் ராசியின் மாற்றம் மிதுன ராசியினருக்கு இனிமையாகவும்
நன்மையாகவும் இருக்கும். சுக்கிரன் உங்களின் பத்தாம் வீட்டில்
சஞ்சரிப்பதால். இது வேலை, பணியிடம், வரவு செலவு என அனைத்திலும் நல்லவிதமான
மாற்றத்தை ஏற்படுத்தும்.. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் நல்ல வேலை
வாய்ப்புகளைப் பெறலாம். வியாபாரம் செய்பவர்கள் இந்தக் காலத்தில் நல்ல
லாபத்தைப் பெறலாம்.
கன்னி: கன்னி ராசிக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தால் ஏற்படும் மாளவ்ய ராஜயோகம்
நன்மை தரும். இதன் மூலம் நீங்கள் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள்.
சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு பலப்படும்.
வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு.
கடகம்: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சுக்கிரன்
உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால். இது ஒரு
அதிர்ஷ்டமான, வெளிநாட்டு இடமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில், நீங்கள்
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ள
விரும்புபவர்களுக்கும் இந்த காலகட்டம் சாதகமானது. மேலும், உங்கள்
தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும். மறுபுறம், மாணவர்கள் போட்டி
தேர்வுகளில் இந்த நேரத்தில் வெற்றிபெற முடியும்.
தனுஷ்: சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஏற்படும் மாளவ்ய ராஜயோகம் தனுசு
ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும்.. ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும்.
நீங்கள் வீடு அல்லது வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. அரசியலில் தீவிரமாக
இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். மன அழுத்தத்திலிருந்து
விடுபடுவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்..