அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்.' என்று 2023-24 பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லிமுடிப்பதற்குள்ளாகவே ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றமே அதிரும் அளவுக்கு அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி வரவேற்றனர்.
`மிகவும் கடினமாக உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வருமானவரியில் பல மாற்றங்களை செய்திருக்கிறோம்'' என்றபடி அந்த அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர். அதைத்தொடர்ந்து யாருக்கு எவ்வளவு வரி தள்ளுபடி என்பதுதான் தற்போதைய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
வருமானவரி கணக்கீடானது பழைய திட்டம் (Old regime) புதிய திட்டம் (New regime) என்று இரண்டு வகைகளில் கணக்கிடப்படுகிறது. இதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வுசெய்துகொள்ளலாம்.
இங்கே புதிய திட்டத்தின் அடிப்படையில் உங்களுக்கான வருமானவரியைக் கணக்கிடலாம்.
உங்களுடைய ஆண்டு மொத்த வருமானம் 20 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாயில் வருமானவரி நிரந்தரக் கழிவு 50 ஆயிரம் போக, 20 லட்ச ரூபாய் என்ற பட்சத்தில், 2023-24 பட்ஜெட்டின் புதிய அறிவிப்புப்படி கீழ்க்கண்ட வகையில் புதிய திட்ட (New regime) வருமான வரியானது கணக்கிடப்படுகிறது.

10%, 15%, 20%, ரூ 15 லட்சத்துக்கு மேல் 30% அதாவது, உங்களுடைய ஆண்டு மொத்த வருமானம் 20 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாயில், நிரந்தரக்கழிவு 50 ஆயிரம் ரூபாய் போக மீதி 20 லட்ச ரூபாய்க்கு வரி கட்டவேண்டும். இதை மேற்கண்ட பட்டியலின்படி பிரிக்கலாம். ஆக வருமானவரி 3 லட்ச ரூபாய் கட்டவேண்டியிருக்கும்.
இதுவே பழைய வருமானவரி திட்டம் என்றால், 20 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நிரந்தரக்கழிவு 50 ஆயிரம், 80 சி கீழ் ரூ 1.5 லட்சம், 80 டி மெடிக்ளைம் பாலிசி ரூ 25 ஆயிரம், வீட்டுவாடகை ரூ 80 ஆயிரம், வீட்டுக்கடன் வட்டி ரூ 2 லட்சம் ஆக 5 லட்சத்தி 5 ஆயிரம் ரூபாயைக் கழித்துவிடலாம். வருமானவரி விலக்கு எல்லாம் போக 15, 45,000 ரூபாய்க்கு வரி கட்டவேண்டும்.
இதுவே வீட்டுக்கடன் இல்லை என்றால், வட்டித் தள்ளுப்படியாக கழித்துக் கொண்ட இரண்டு லட்ச ரூபாயையும் வருமானத்தில் சேர்த்து வரி கட்டவேண்டியிருக்கும். அந்த அடிப்படையில் கணக்கிட்டால் ரூ. 3,36,000 வருமான வரிக் கட்ட வேண்டி வரும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...