குரு பெயர்ச்சி 2023 - 2024 : கிரகங்கள் நகரக்கூடியவை. எனவே, தான் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்.
தனக்காரகன், தேவ குரு, பிரகஸ்பதி என அழைக்கப்படக்கூடிய குரு பகவான், தனுசு மற்றும் மீன ராசிக்கு அதிபதி. குரு பார்க்க கோடி புண்ணியம் என பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதற்கு அர்த்தம், குரு பெயர்ச்சியின் போது அவரது பார்வை எந்த வீடுகளில் நேரடியாக விழுகிறதோ அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதுதான்.
அந்தவகையில், குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் விழுவதால், இந்த ராசியினருக்கு அற்புதமான பலன் கிடைக்கும். இவரின் பார்வை பலன், அமர்ந்திருக்கும் இடம் ஆகியவற்றை பொறுத்து அதிர்ஷ்ட பலன்கள் மற்றும் கோடீஸ்வர யோகம் யாருக்கு கிடைக்கும் என இங்கே பார்க்கலாம்.
மேஷம் :
மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நல்ல அதிர்ஷ்டத்தை தரும். ஏனெனில், குரு ஒருவரின் ராசிக்குள் நுழைகிறார் என்றால், அவர் உங்கள் துணையாக வர உள்ளார் என்று அர்த்தம். நீங்கள் குரு பகவான் பெயர்ச்சி செய்ய உள்ள ராசிக்காரராக இருப்பதால், உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். நல்ல திருமண வரன், வேலைவாய்ப்பு, செல்வ செழிப்பு ஆகியவற்றை பெறுவீர்கள். நிதி நிலை மேம்படும், இடமாற்றம் அல்லது சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும்.
மிதுனம் :
குருவின் பார்வையானது மிதுனத்திற்கு கிடைக்காவிட்டாலும், தனகாரகனான குரு 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு நிதிநிலையில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் நிதி சம்மந்தமாக நீங்கள் எடுக்கும் எல்லா செயலும் வெற்றி பெறுவதுடன், நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். முதலீடு செய்திருந்தால் அதன் மூலம் நல்ல லாபத்தையும் பெறுவீர்கள்.
சிம்மம் :
இயல்பாகவே வெற்றிக்கு சொந்தக்காரர்கள் சிம்ம ராசிக்காரர்கள். இந்த குரு பெயர்ச்சி இவர்களுக்கு மேலும் அதிர்ஷ்டத்தை கொடுக்க உள்ளது. வரும் 22 ஆம் தேதி குரு சிம்ம ராசிக்கு 9 ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
9 ஆம் இடத்தில் குரு அமர்வது மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. அதனால், நீங்கள் செய்த நல் வினைகளுக்கு ஏற்ற நல்ல பலன்களை பெறுவீர்கள். அதனால், நீங்கள் எடுக்கும் எந்த ஒரு சிறிய முயற்சிக்கும் பெரிய வெற்றி கிடைக்கும்.
துலாம் :
துலாம் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7 ஆம் வீட்டில் குரு பகவான் அடுத்த ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிக்க உள்ளார். குருவின் நேரடிப் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் உங்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சியிலும் முன்னேற்றம் உண்டாகும். குறிப்பாக வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளி, பங்காளி வகையில் ஒற்றுமை, என பல அனுகூலமும் உண்டாகும்.
கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் மூலம் நிதி ஆதாயம் உண்டாகும். சுருக்கமாகக் கூறினால், அடுத்த ஒரு வருடத்திற்கு உங்க காட்டில் அதிர்ஷ்ட மழை தான்.
தனுசு
குரு பகவான் தரக்கூடிய கோடீஸ்வர யோகத்தை பெற உள்ள மற்றொரு ராசி தனுசு. குரு உங்கள் ராசிக்கு 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர உள்ளார். இதனால், குருவின் 9 ஆம் பார்வை ராசி மீது விழுவதுடன், ராசிக்கு 5-ல் குரு அமர்ந்திருப்பது கூடுதல் விசேஷம்.
குரு இருக்கும் இடத்திலிருந்து 9 ஆம் இடத்தில் இருக்கும் கிரகமாக இருந்தாலும் சரி, ராசியாக இருந்தாலும் சரி அது பல விதத்தில் நற்பலன்களை பெரும். அந்த வகையில் உங்கள் ராசிக்கு இந்த குரு பயற்சி நல்ல யோக பலன்களை கொடுக்கும்.