இளந்தளிரே
எதிர்காலமே
பள்ளிப்பூக்களே
வகுப்பறை வைரங்களே
உங்களுக்கென் தேர்வு வாழ்த்துகள்..
பள்ளிவாழ்வின் இறுதி பயணத்தில்
இலக்கை எட்டவிருக்கும் கண்மணிகளே..
தேர்வென்பது போருக்கான பயணமல்ல
பயங்கொளாது நிதானியுங்கள்
இவ்வளவு நாள் கற்றதை நினைவுகூறும் நல்நிகழ்வது,
அச்சம் அகலுங்கள்..
திட்டமிட்டு நேரம் செலவழியுங்கள்
பதட்டம் தவிருங்கள்..
எதிர்பாரா கேள்வி வந்திடுமோ என முன்னமே யோசனையில் ஆழ வேண்டாம்
யாவும் அறியலாம் தெளிந்த மனநிலையில்..
உடல்நல கவனமெடுங்கள்
உடலின்றி உயிரியக்கம் ஏது
தேர்வை பிறரின் லட்சியத்திற்காகவோ கனவுகளுக்காகவோ
எழுதாதீர்..
உங்கள் மனங்காட்டும் பாதையில் செல்லுங்கள்..
மதிப்பெண் போதையில் தடுமாற்ற பாதையில் வேகமெடுக்க வேணாம்..
உமது அறிவின் அளவீட்டை அறிந்திட அக்கறை கொண்டு எழுதுங்கள்
தோல்வி சிந்தை தொலையுங்கள்
கிட்டப்போவது ஏதாயினும் அது உம்மாலே தீர்மானிக்கப்படுவது என்பதை நன்குணருங்கள்..
கடைசிநேர பரபரப்புகளின்றி யாவையும் முன்னரே தீர்மானியுங்கள்
நன்றாய் எழுதுங்கள்
நலம் விளையும்
அதற்குமுன்
ஒன்றை நெஞ்சிலெழுதுங்கள்
உலகம் யாவருக்குமானது உனக்கான இடம் நிச்சயமுண்டு
அதை மனதில் கொண்டால் நிச்சயம் ஜெயமுண்டு..
இனிய தேர்வுநாள் வாழ்த்துகள்
அன்புடன்,
சீனி.தனஞ்செழியன்,