School Morning Prayer Activities - 13.03.2023 : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 13 March 2023

School Morning Prayer Activities - 13.03.2023 :


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பொறை உடைமை

குறள் எண் : 153
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

பொருள்:
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது


பழமொழி :

He is not fit to command others that cannot command himself

தன்னை ஆளத் தெரியாதவன் பிறரை ஆள முடியாது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. கண் எனது உடம்புக்கும் மனதிற்கும் வெளிச்சம். 

2. எனவே என் கண் தெளிவானவைகளையும் சரியானவைகளையும் பார்க்க முயற்சிப்பேன்


பொன்மொழி :

வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது நடத்தையிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர முடியும்.


பொது அறிவு :

1. யானையின் கர்ப்ப காலம் எவ்வளவு? 

22 மாதங்கள்.

 2. பாலில் காணப்படும் சர்க்கரையின் பெயர் என்ன ?

 லாக்டோஸ்.

English words & meanings :

galore - in abundance. There are galore prizes for everyone. adjective. ஏராளமான. பெயரடை


ஆரோக்ய வாழ்வு :

கொத்தமல்லியை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, பல பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது. கொத்தமல்லியில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-கே, வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ அதிகளவில் உள்ளன.  கூடுதலாக, இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகளும் உள்ளன.



கணினி யுகம்

Alt+Tab: It allows you to switch between open programs on a computer. You are required to hold down the Alt key and keep pressing the Tab key to move from one program to another and release the Tab key when it is on the program that you want to open. Alt+F: It enables you to access the File menu options in the current program.


நீதிக்கதை

 ஒற்றன்!

ஒரு முறை தெனாலி ராமன் வாழ்கின்ற நாட்டு மன்னருக்கு அண்டை நாட்டு அரசன் ஒருவர் ஓலை அனுப்பியிருந்தார். அந்த ஓலையில், மதிப்புக்குறிய ராஜாவுக்கு, உங்கள் நாட்டின் மேல் நான் போர் தொடுக்க உத்தேசித்துள்ளேன். மூன்றாவது பெளர்ணமி அன்று உங்கள் நாட்டிற்கு எதிராக போர் முரசு கொட்டப்படும். எனது நாட்டுப்படையைப் பற்றி நீங்கள் அறியாததா? உங்களுக்கு போருக்கு சம்மதமா? கத்தியின்றி இரத்தமின்றி போர் முடிய வேண்டும் என்றால், நீங்களும், உங்கள் நாடும் என்னிடம் தோல்வியை ஏற்றுக் கொண்டு, நாட்டினை என்னிடம் கொடுக்க வேண்டும். 

அப்படி நீங்கள் செய்தால் உங்களுக்கு உயிர் பிச்சை கொடுத்து நாட்டில் எங்கேயாவது ஒரு ஓரத்தில் நீங்கள் வாழ்ந்து கொள்ளலாம். இப்படிக்கு, ராஜ ராஜ சிம்மன். மன்னர் உடனே அரச சபையினை நோக்கி அவர்களது கருத்துக்களை கூறச் சொன்னார். சேனாதிபதி முதல் மந்திரிகள் வரை ராஜ ராஜ சிம்மனின் படையை வெல்ல முடியாது என்பதை ஆணித்தரமாக கூறினார்கள். மன்னனுக்கும் தெரியும் அந்தப் படையை வெல்லமுடியாது. மேலும் போர் ஏற்பட்டால் எண்ணற்ற மக்கள் உயிரை இழப்பார்கள், பெரும் சேதம் ஏற்படும். 

இதற்கு என்ன தான் வழி என்று மன்னர் கேட்டார். உடனே அனைவரும் ஆளுக்கு ஒன்றாக பேசினார்கள். அனைவரின் கருத்தும் போரிடாமல் எதிரிக்கு தலை வணங்கலாம் என்பதே. இவ்வளவு நேரமும் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த தெனாலிராமன் பேசத் தொடங்கினார். மன்னா! எதிரி மன்னன் ராஜ ராஜ சிம்மனிடம் நீங்கள் மண்டியிட்டு விட்டால், நாளைய வரலாறு நம் நாட்டையே கேலி செய்யும், இத்தனை நாள் நீங்க பெற்றிருந்த புகழ் எல்லாம் மங்கி போயிடும், மக்களுக்கும் பெரிய அவமானமாகி விடும்.. அதற்கு பதில் போரிட்டு மடிந்தாலும், மாபெரும் படையுடன் போரிட்டு செத்து மடிந்தார்கள் என்று வரலாறு இருக்கும்.

அரசரை தவிர அனைவரும் தெனாலிக்கு பித்து பிடித்து விட்டது என்று கூறி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். முடிவில் மன்னர், தெனாலிராமன் சொல்வதில் உண்மை இருக்கின்றது. அடிமையாக வாழ்வதை விட போர் செய்து மடியவே விரும்புகின்றேன்! என்றார். அத்தோடு அரச சபை கலைந்து விட்டது. அதன் பின்னர் மன்னரும் தெனாலியும் நீண்ட நேரம் தனிமையில் உரையாடினார்கள். இதற்கு மாற்று வழி உண்டா என்று ஆய்வு செய்தார்கள். ஐந்து நாள்களுக்குப் பின் மீண்டும் அரச சபை கூடியது. அரசரைப் பார்த்து மன்னா உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருந்தால், இந்த விசயத்தை என்னிடம் விடுங்கள். நான் பார்த்துக் கொள்கின்றேன். எனது உயிரை கொடுத்தாவது இந்த நாட்டினை காப்பாற்றுகின்றேன் என்றார் தெனாலி.

அதற்கு மன்னர் சம்மதம் தெரிவித்தார். தெனாலி கூறுவதைப் போன்று ஒரு ஓலை எழுதி மோதிர முத்திரை பதித்து கொடுத்தார் தெனாலியிடம். அந்த ஓலையை எடுத்துக் கொண்டு தெனாலி எதிரி நாட்டு மன்னர் ராஜ ராஜ சிம்மம் முன்னால் போய் நின்றார். அரசர் கொடுத்த ஓலையை உரக்கப் படித்தார். மதிப்புக்குறிய மன்னர் ராஜ ராஜ சிம்மனுக்கு, உங்கள் படைக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல எம் வீரர்கள். போருக்கான நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். உங்கள் படையின் மனபலம் உங்களுக்கு சரியாக தெரியவில்லை என்று நினைக்கின்றேன். அவர்கள் எங்கள் படையோடு போர் செய்வதற்கு பயந்து நடுங்குகின்றார்கள். எதற்கு கோழைகளின் உயிரை கொல்லவேண்டும் என்று எண்ணுகிறேன். இந்த ஓலையை எடுத்து வந்த வீரர் எங்கள் படையில் மருத்துவ உதவி செய்பவர். இவரை உங்கள் நாட்டு சேனாதிபதி சண்டையிட்டு வென்று விட்டால், எனது நாட்டை உங்களுக்கு பரிசாக கொடுத்துவிடுகின்றேன்.

ஓலையில் எழுதியிருப்பதை கேட்ட ராஜ ராஜ சிம்மன், தெனாலியை மாறி, மாறிப் பார்த்தார். மெலிந்த உருவம் கொண்ட தெனாலியை கேலியாகப் பார்த்தார். யார் அங்கே இவனை பிடித்து சிறையில் அடையுங்கள் என்றார் மன்னர். மன்னிக்கவும் மன்னா, ஒரு நாட்டின் தூதுவனாக வந்தவரை சிறையில் அடைப்பது போர் மரபுகளை மீறும் செயல் அல்லவா? என்றார் தெனாலி. உமது மன்னர் உம்மை எமது சேனாதிபதியுடன் சண்டை செய்யும்படி அனுப்பியுள்ளதாக இந்த ஓலையில் எழுதியிருக்கின்றார், இது தெரியுமா உனக்கு? தெனாலி அப்படியா மன்னா. எங்கள் மன்னர் இதைப் பற்றி எனக்கு எதும் கூறவில்லை. ஆனாலும் எங்கள் மன்னர் உத்தரவுக்கு கட்டுப்படுகின்றேன். ஆனால் ஒரு வேண்டுகோள். எங்கள் நாட்டு சட்டம், சண்டை செய்யும் முன், சண்டை செய்யும் இருவரும் மூன்று நாட்களுக்கு சிறையில் இருக்க வேண்டும் என்பதே, அதன்படி என்னையும், உங்க சேனாதிபதியையும் சிறையில் அடையுங்க, நான்காம் நாள் நான் அவருடன் போட்டி போடுகிறேன்.

அப்போது தான் தெனாலி சேனாதிபதியைக் கண்டார். ஏழு அடி உயரத்தில் ஒரு மாமிச மலை போன்று இருந்தான் அவன். தெனாலியும், சேனாதிபதியும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இருவரும் அடுத்தடுத்த சிறையில் அடைக்கப்பட்டார்கள். இருவருக்கும் இடையில் ஒரு சுவர் இருந்தது. இருவரும் பார்த்துக் கொள்ள முடியாது ஆனால் பேசிக் கொள்ளலாம். இருவருக்கும் நன்றாக சாப்பாடு கொடுத்தார்கள். சாப்பாடு முடிந்ததும், இப்போ சாப்பிட்டதைப் போல் தான் சண்டையில் உன்னை கொன்று, உன்னை சாப்பிடுவேன் என்று கத்தியபடி இருப்பான் சேனாதிபதி. சரி சரி அப்போது பார்த்துக் கொள்வோம் என்று மட்டும் பதில் சொல்வார் தெனாலி. சேனாதிபதி நித்திரையானது இருவருக்கும் இடையில் இருந்த சுவரை தண்ணீர் ஊற்றி மெல்ல மெல்ல கரண்டியால் சுரண்ட ஆரம்பித்தார் தெனாலி. விடியும் போது ஒரு அடிக்கும் அதிகமான அகலம் கொண்ட சுவரை சுரண்டி மெல்லியதாக ஆக்கிவிட்டார்.

இது ஏதும் சேனாதிபதிக்கு தெரியாது. மறுநாள் சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும், சேனாதிபதி கத்த ஆரம்பித்து விட்டான். உன்னை கொல்வேன், தின்னுவேன் என்று. சரி, சரி சேனாதிபதி. நாளை சண்டையின் போது அதைப் பார்ப்போம். இப்போ நான் வெற்றிலை சாப்பிடுகின்றேன் உன்னிடம் சுண்ணாம்பு இருந்தால் தா. சுண்ணாம்பு இருக்கின்றது எப்படி தருவது என்றான் சேனாதிபதி. இதோ விரலில் பூசி விடு என்று தான் சுரண்டிய சுவரில் கையால் குத்தினார். தெனாலியின் கை அடுத்த பக்கம் வந்து விட்டதை பார்த்து பயந்து விட்டான் சேனாதிபதி.

சேனாதிபதி சுண்ணாம்பை பூசிவிடும் போது அவன் கை நடுங்குவது கவனித்த தெனாலி, என்ன சுவரை உடைத்ததற்கே இப்படி பயப்படுகின்றார்? எங்கள் நாட்டில் நான் ஒரே அடியில் ஒரு யானையைக் கொன்று இருக்கின்றேன் தெரியுமா? நான் எல்லாம் சும்மா தான். எங்கள் சேனாதிபதி யானையை தனது ஒரு கையால் தூக்கி சுற்றுவதை நீ பார்க்க வேண்டும். யாரிடமும் சொல்லிவிடாதே எங்கள் நாட்டிற்கு வந்த ஒரு முனிவர், எங்கள் படையில் இருக்கும் வீரர்கள் அனைவருக்கும் அசுர பலம் கிடைக்க வரம் தந்தார். அதன் பின்னர் தான் எங்களுக்கு இப்படி அசுர பலம் கிடைத்தது என்றார் தெனாலி. எல்லாவற்றையும் கேட்ட சேனாதிபதி பயந்து விட்டான். மறு நாள் நாட்டு மக்கள் அனைவரும் சண்டையைக் காண வந்திருந்தார்கள். மன்னர் தனது வாளை சேனாதிபதிக்கு கொடுத்து தலையை கொய்து விடு என்றார். தெனாலியைப் பார்த்து உமக்கு என்ன ஆயுதம் வேண்டுமோ கேட்டு வாங்கிக் கொள்ளும் என்றார். மன்னா எனக்கு ஆயுதம் வேண்டாம். வெற்றிலை மாத்திரம் கொடுங்கள் போதும் என்றார்.

மன்னர் சிரித்துக் கொண்டு ஆகட்டும் என்றார். இரண்டு வீரர்கள் ஓடிவந்து, ஒருவர் வெற்றிலை கொடுத்தார். மற்றவர் சுண்ணாம்பு கொடுக்க போனார். சுண்ணாம்பை சேனாதிபதியின் நெற்றியில் வையுங்கள் நான் எடுத்துக் கொள்கின்றேன். சேனாதிபதியின் நெற்றியில் சுண்ணாம்பு வைத்ததும் தனது கை முட்டியை முறுக்கினார். அவ்வளவு தான். ஐயோ என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று தெனாலியின் காலில் விழுந்து விட்டார் சேனாதிபதி. மன்னா! இவர்கள் நாட்டின் மேல் ஆசைபடுவதை விட்டுவிடுங்கள். இவர் ஒருவரே நம் படையை அழித்து விடுவார் என்று எல்லாவற்றையும் சொன்னான். சுவரை போய் பார்த்த மன்னனும் உண்மை என்றே நினைத்து விட்டார். ஒரு குதிரை வண்டியில் நிறைய பொற்காசுகளை தெனாலியின் மன்னருக்கு பரிசாக கொடுப்பதாகவும், தன்னை மன்னித்து விடும்படியும் மன்னர் ஓலை எழுதி தெனாலியிடம் கொடுத்துவிட்டார். வெற்றியோடு நாடு திரும்பும் தெனாலியை வரவேற்க மன்னரும் மக்களும் எல்லையில் காத்திருந்தார்கள்.


இன்றைய செய்திகள் - 13.03. 2023

* தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடக்கம்.

* அகழ் வைப்பகத்தில் தொல் பொருட்களை பார்க்க குவியும் மாணவர்கள், பொதுமக்கள்: சுற்றுலாத் தலமாக மாறிய கீழடி கிராமம்.

* தற்கொலைகளுக்கு காரணமாகும் மிகவும் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான தடை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் துல்லிய வானிலை முன்னறிவிப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

* இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

* அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறை வசதியை ஏற்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

* அமெரிக்க வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக, ரேவதி அத்வைதி மற்றும் மணிஷ் பாப்னா ஆகிய 2 இந்திய அமெரிக்கர்கள் உட்பட 14 பேரை நியமித்துள்ளார் அதிபர் ஜோ பைடன்.

* ஐ.டி.எப். பெண்கள் ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

* 2வது டி20 போட்டி: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம். தொடரை கைப்பற்றி அசத்தல்.


Today's Headlines

* Tamil Nadu Plus 2 general exams start today.

* Students, public gather to see antiques at the excavation site: keezhadi village turned tourist spot.

 * The ban on six of the most dangerous pesticides that cause suicides has been extended for another 60 days.

 * S. Balachandran, Head of South Zone of India Meteorological Center has said that steps are being taken to provide accurate weather forecasts through artificial intelligence technology in Tamil Nadu.

*  The Union Health Department has directed all the state governments to strictly implement the corona prevention procedures to control the spread of the influenza virus.

 * The Ministry of Railways is planning to install bio-toilets in all coaches.

 * President Joe Biden has appointed 14 people, including 2 Indian-Americans, Revathi Advaidi and Manish Pabna, as members of the US Trade Policy and Negotiations Advisory Council.

* IDF  Women's Open Tennis: India's Ankita Raina advances to final.

 * 2nd T20I: Bangladesh shocked England and Grab the series and get freaky.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H