கிராமத்தில்
வயதான பெரியவர்களை பார்த்தால் 60, 70 வயதுக்கு மேலானாலும் சுறுசுறுப்பாக
நடப்பர். இளசுகளுக்கு போட்டியாக குடுகுடுவென்று ஓடியாடி நடமாடுவர்.
உங்க ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? என்று கேட்டால், 'பழைய சோறும்,
கம்பங்கழியும் தான்' என டக்கென்று பதிலளிப்பர். ஆனால் இன்றைய டிஜிட்டல்
உலகில் இளம் தலைமுறையினரோ சிறிது தூரம் வெளியில் நடந்து வந்தாலே சோர்ந்து
விடுகின்றனர். இதற்கு மாறி வரும் நம் உணவு முறையும் ஒரு காரணமாக உள்ளது.
பழைய சாதம், நீராகாரம், பழங்கஞ்சி, கரைத்த சாதம் மற்றும் ஐஸ் பிரியாணி என அழைக்கப்படும் இந்த பழைய சோற்றில் ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. தினமும் இரவு மீந்த சோற்றில் சிறிது தண்ணீர் விட்டு மூடி வைத்து விட வேண்டும். இரவு முழுவதும் ஊறும் சோற்றில் நன்மை தரும் லாக்டோ பேசிலஸ் என்ற பாக்டீரியாக்கள் வளரக்கூடும். மறுநாள் காலையில் தண்ணீரை தனியாகவோ அல்லது சோற்றுடன் கரைத்தோ சாப்பிடலாம்.
குறிப்பாக, இந்த கோடையில் சாப்பிட ஏற்ற குளிர்ச்சியான சத்துக்கள் நிறைந்த உணவு இது. பழைய சோற்றின் பலன்களை அமெரிக்கன், 'நியூட்ரிஷன் அசோசியேஷன்' அழகாக பட்டியலிட்டுள்ளது. இந்த நீராகாரத்தில் வைட்டமின்கள் அதிகம். வெறும் வயிற்றில் நீராகாரதை குடித்தால் மலச்சிக்கல், உஷ்ணம் உட்பட அனைத்து வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்குகிறது.
இதில் இயற்கையான குளிர்ச்சியூட்டக்கூடிய தன்மை இருப்பதால், தொடர்ச்சியாக சாப்பிட்டு வர, உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியாக வைக்கும். வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால், புண்கள் விரைவில் குணமாகும். இளமை மற்றும் பொலிவான தோற்றத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இரும்பு, பொட்டாசியம், கால்சியம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால், தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
பழைய சோற்றை சாப்பிடும்போது உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஏனென்றால், ஒரே இரவில் குளிர்விக்கப்படும் சாதத்தில், புதிதாக சமைத்ததை விட 60% குறைவான கலோரிகள் உள்ளன. சாதாரணமாக 100 கிராம் சாதத்தில் 4 கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஆனால், பழைய சாதத்தில் 75 கிராமாக மாறக்கூடும்.
எனவே, அனீமியா பிரச்னை உள்ளவர்கள் தாராளமாக பழைய சாதத்தை சாப்பிடலாம். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், பழைய சோற்றுடன் தயிர் கலந்து வெங்காயத்துடன் சாப்பிடலாம். இதிலுள்ள வைட்டமின்கள் பி6 மற்றும் பி12 சத்தானது மூளை மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது. எனவே, காலையில் குழந்தைகளுக்கு பழைய சோற்றை தரும் போது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இதை சாப்பிடும் போது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். காலை வேளையில் சரியான பிரேக் பாஸ்ட் உணவாக இது உள்ளது என்பது டாக்டர்களின் கருத்தாகும்.