மத்திய
அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC) 2023ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கை வாயிலாக 1,600 காலியிடங்கள் நிரப்பப்பட
உள்ளன.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பதவிகள்: மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர் (Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant), டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்பில் கணிதம் உள்ளடங்கிய அறிவியல் பாடங்களை எடுத்து படித்து ( Science stream with Mathematics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01-08-2023 அன்று 18-27க்குள் இருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.