மோச்சா புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் வானிலை மையம் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மோச்சா புயல் மிகவும் தீவிரமடைந்து வடக்கு -வடகிழக்கு நோக்கிநகர்ந்து வங்கதசம், மியான்மரில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே, நேற்று டெக்னாப்பகுதியில் புயல் கரையை கடந்தது.. இதன்காணமாக, டெக்னாப், ஷாபோரி டீப் பகுதிகளில் மணிக்கு 200 கிமீக்கும் அதிகமானவேகத்தில் காற்று வீசியது..
இதன்காரணமாக, வடக்கு மியான்மர்-வங்காளதேசக் கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து பெய்தது. முன்னதாக, மோக்கோ புயல் அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேசம் மற்றும் மியான்மரில் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளில் வங்கதேசத்தை தாக்கும் மிக சக்திவாய்ந்த புயல் மோச்சா என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.
வானிலை மையம்: இதனிடையே, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.. 16, 17 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் உயரக்கூடும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
ஆனால், தமிகத்தில் இனிமேல் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இன்றும், நாளையும், அதாவது 15, 16ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம், வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உடல்நிலை பாதிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதற்கு நடுவில், ஆறுதல் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.. அதாவது, வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் வளிமண்டலத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவும் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால், அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில் மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை இருந்தது என்பதும் அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..
2 மாவட்டம்தான்: மோக்கோ புயல் கரையை கடந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு இப்போதைக்கு மழை இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆனால் அதே நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டத்தில் மட்டும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெறும் 2 மாவட்டங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்தந்த மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.