சந்திர கிரகணம் 2023 மே 5ம் தேதி சித்ராபவுர்ணமி தினமான வெள்ளிக்கிழமை அன்று நிகழ உள்ளது. இந்த ஆண்டில் ஏற்படும் முதல் சந்திர கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக ஏற்பட உள்ளது.
இது உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும். கிட்டத்தட்ட 4 மணி நேரம் இந்த கிரகணம் நிகழ உள்ளது என்றாலும் இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் தெரியாது என்பதால் கிரகண தோஷம் எதுவுமில்லை. துலாம் ராசியில் கேது உடன் இணையப்போகும் சந்திரனால் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சந்திர கிரகணம்: சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். அப்போது, பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரன் பூமியின் நிழலின் மங்கலான பெனும்பிரல் பகுதி வழியாக பயணிக்கும் போது, சந்திர கிரகணம் நிகழ்கிறது.
சித்ரா பவுர்ணமி: சந்திர கிரகணம் பவுர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். சோபகிருது ஆண்டில் 3 சூரிய கிரகணமும் 3 சந்திர கிரகணமும் நிகழும் எனவும் இதில் ஒரு சந்திர கிரகணம் மட்டுமே இந்தியாவில் தெரியும் எனவும் தமிழ் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில் வரும் 5ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
கிரகணம் எங்கு தெரியும்: முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம், புற நிழல் சந்திர கிரகணம் என்று மூன்று வகையான சந்திர கிரகணங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். கிரகணங்களைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டாலும் அறிவியல் ரீதியாக பார்த்தால் இது முக்கியமான வானியல் நிகழ்வுகளாகும்.
ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2023 மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை சித்திரை பெளர்ணமி அன்று ஏற்படுகிறது.
இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் வசிப்பவர்கள் பார்க்க முடியும். மேலும் பசுபிக் அட்லாண்டிக், இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் தெளிவாக இந்த சந்திர கிரகணம் தெரியுமாம்.
கிரகணம் எப்போது தெரியும்: இந்த பகுதி சந்திர கிரகணம் உலக நேரப்படி மே 5ம் தேதி மாலை 3.14 மணிக்கு தொடங்கி 7.31 மணி வரை தெரியும். இந்திய நேரப்படி இந்த பக்தி சந்திர கிரகணம் இரவு 8.44.11 மணிக்கு தொடங்குகிறது. இந்த கிரகணத்தின் உச்ச கிரகணம் இரவு 10.52.59 மணிக்கு ஏற்படும். இந்த கிரகணம் மே 6ம் தேதி அதிகாலை 01.01.45 மணிக்கு நிறைவடைகிறது. இந்த கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மேஷம்: செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் கேது உடன் சந்திரன் இணையும் போது கிரகணம் நிகழ்கிறது. பொதுவாக இப்போது உங்கள் ராசியில் சூரியன், புதன், குரு, ராகு என 4 கிரகங்கள் இணைந்துள்ளன. கொஞ்சம் குழப்பமான மனநிலையில்தான் இருப்பீர்கள். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே சந்திர கிரகண நாளில் சிவனின் நாமத்தை உச்சரிப்பு நல்லது. பண முதலீடுகளில் கவனம் தேவை. புதிய நபர்களை நம்பாதீர்கள். வாகன பயணங்களில் நிதானம் அவசியம்.
ரிஷபம்: ஆறாம் வீடான ருண ரோக ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்கிறது. பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவைப்படும். வேலையில் பொறுப்பாகவும் கவனமாகவும் இல்லாவிட்டால் இப்போது உள்ள சூழ்நிலையில் வேலையை இழக்க நேரிடும். சந்திர கிரகணத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்க திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே..நான்காம் வீட்டில் சந்திரன் கேதுவின் பிடியில் சிக்கியுள்ளதால் மன உளைச்சல் உண்டாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. சந்திர கிரகண நாளில் நிதானம் அவசியம்.
சிம்மம்: சந்திர கிரகணம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் நிகழப்போகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது கவனமும் நிதானமும் தேவைப்படும். வாகன பயணங்களில் அதிக வேகம் வேண்டாம். கூர்மையான பொருட்களை கையாளும் போது நிதானம் தேவை. பண விசயங்களில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட வேண்டாம்.
துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே..உங்களுடைய ராசிக்குள் கேதுவின் பிடியில் சந்திரன் சிக்குகிறார். சூரியன், குரு,ராகுவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் அன்றைய தினம் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.









