கடனை அடைத்து மீண்டு வரும் உறுதி இருந்தால், செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிக்கலாம். இந்த தொகையை கடன் தவணையாக பயன்படுத்திக் கொள்ளலாம். பெரிய கடன்: அதிக கடன் இருந்தால் பெரிய கடனை அடைக்க முன்னுரிமை அளிப்பதே சரியானது என கருதப்படுகிறது. ஆனால், சிறிய கடன்களை முதலில் அடைக்கத் துவங்கும் உத்தி ஏற்றதாக இருக்கும்.
இது எளிதில் சாத்தியமாவதோடு, ஒரு கடனை அடைத்தது, அடுத்த கடன்களை அடைக்க ஊக்கம் தரும். கடன் சீரமைப்பு: பல்வேறு கடன்களை ஒன்றாக்கி, ஒரே தவணையாக செலுத்தும் வகையில் கடன் சீரமைப்பை நாடுவது ஒரு வழியாகக் கருதப்படுகிறது. எனினும் இந்த வசதி எல்லாருக்கும் சாத்தியம் இல்லை. போதிய கிரெடிட் ஸ்கோர் இல்லாதவர்கள் இத்தகைய வசதியை பெறுவது கடினம்.குறைந்த தொகை: கிரெடிட் கார்டு கடன் இருந்தால், குறைந்தபட்ச தொகையை செலுத்தினால் போதும் என பலர் நினைக்கலாம்.
ஆனால், இதன் மூலம் வட்டி சுமை அதிகரித்து, கடன் சுமையும் அதிகரிக்கும். நாளடைவில் கடன் சுமை கழுத்தை நெரிக்கலாம். எனவே, கிரெடிட் கார்டை கவனமாக பயன்படுத்த வேண்டும்.கடன் வலை: வரம்பில்லாமல் கடன் வாங்கும் போது, கடன் சுமை அதிகரித்து கடன் வலையில் சிக்கும் வாய்ப்பு அதிகம். கடன் சுமையில் இருந்து மீண்டு வருவது மிரட்சியாக தோன்றலாம். ஆனால், கடனில் இருந்து மீளும் உறுதி இருந்தால், அதற்கான வழிகளை கண்டறியலாம். இது, கடனில்லா வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.









