தமிழ்நாட்டில் இன்றில் இருந்து வெப்பநிலை உயரும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறி உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. வெயிலின் உக்கிரம் இப்போதைக்கு குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
சென்னை ரெயின்ஸ்:இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இன்றில் இருந்து வெப்பநிலை உயரும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறி உள்ளது.
இது தொடர்பாக அவர்கள் செய்துள்ள போஸ்டில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் உட்பட வட தமிழ்நாட்டில் மிதமான வெப்ப நிலையில் நிலவும் கடைசி நாளாக இன்று இருக்கலாம்.
அதனால் நாளை முதல் படிப்படியாக அதிகபட்ச வெப்பநிலையானது நிலவும். வெப்பநிலை நாளையில் இருந்து வலுவடைந்து குறைந்தபட்ச வெப்பநிலையே 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையை எட்டும். மேற்கத்திய காற்றுகளின் தாக்கத்தால் வெப்பநிலை தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு வானிலை:தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
வரும் நாட்களில் வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பேரன்ஹீட்டை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த 3-5 நாட்களில் வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும். தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும்.
ஆனால் மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காரணம் என்ன?:தமிழ்நாட்டில் இப்படி வெப்பநிலை உயர காரணம் இருக்கிறது.
வங்கதேசம் மற்றும் மியான்மரை நேற்று மோச்சா புயல் தாக்கியது. 240 கிமீ வேகத்தில் இந்த புயல் காரணமாக கடுமையான காற்று வீசியது.
சூப்பர் சூறாவளியாக இந்த புயல் மியான்மரில் கரையை கடந்துள்ளது.