10 ஆம் வகுப்பு கணித பாடத்தில் இடம் பெற்றிருக்கும் சீட்டுக்கட்டு கணக்கு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த பகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சீட்டுக்கட்டு கணக்கு
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்த முதல்நாளிலேயே புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10 ஆம் வகுப்பு கணித பாட திட்டத்தில் சீட்டுக்கட்டு பகுதி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், பல வருடங்களாவே 10 ஆம் வகுப்பு கணித பாடத்தில் இந்த சீட்டுக்கட்டு விளையாட்டு ஒரு பாடமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், கணித பாடமாக இருந்து வரும் சீட்டுக்கட்டு பகுதியை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இடம் பெற்றிருக்கும் சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சீட்டுக்கட்டு பாடத்திற்கு பதிலாக புதிய பாட பகுதி அமலுக்கு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.