CPDயான CRC - இரண்டெழுத்து மாற்றமா? தலையெழுத்தே மாற்றமா? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


CPDயான CRC - இரண்டெழுத்து மாற்றமா? தலையெழுத்தே மாற்றமா?

IMG_20230606_175045

CPD : Continuous Professional Development என்பது பல்வேறு துறைகளில் அதிலுள்ளோரின் தொழில் திறத்தை மேம்படுத்த அளிக்கப்படும் பயிற்சி / தொழில் திறத்தை அளவிடப்படும் தேர்வுமுறை ஆகும்.

கடந்த இரு தினங்களாக Auditorகளுக்கான CPD தேர்வுமுறை குறித்த பதிவுதான் ஆசிரியர்களுக்கான CPD என்று தவறான புரிதலில் சமூக ஊடகங்களில் உருட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கான CPD குறித்து இப்பதிவில் காண்போம்.


அதற்குமுன், நாம் விரும்பினாலும் - வெறுத்தாலும் - எதிர்த்தாலும் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் வகுப்பறைகளைச் சுற்றி NEP2020 என்ற புதிய கல்விக் கொள்கையின் கோட்டைச் சுவர் EPSன் அஇஅதிமுக & MKSன் திமுக ஆட்சிகாலத்தில் திறம்பட கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

திராவிட மாடல் என்று விளம்பரப்படுத்திக் கொண்டாலும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை 100% NEP2020ன் படிதான் செயல்பட்டு வருகிறது. அப்படியென்றால் NEP 100%  நடைமுறைக்கு வந்துவிட்டதா என்றால் இல்லை. ஆனால் பள்ளிக் கல்வித்துறையில் 2019ற்குப் பிறகான கட்டமைப்பும், ஒவ்வொரு நகர்வும் 100% NEP2020ன் படிதான் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், NEP2020ன் அடியொற்றிய மற்றுமொரு நகர்வுதான் CRCயை CPDயாக மாற்றியுள்ளது. அடிப்படையில் CRC பயிற்சியே ஒன்றிய அரசின் கட்டமைப்புதான். DPEP, SSA, RMSA, SSA என்று ஒன்றிய அரசில் வகுக்கப்பட்ட திட்டங்கள்தான் அன்றுமுதல் இன்றுவரை நடைமுறையில் உள்ளன. இதில் ஒன்றிய அரசின் DPEP காலத்தில் வலியுறுத்தப்பட்ட பணியிடைப் பயிற்சிக்கான கட்டமைப்பே நேற்றுவரை இருந்த CRC.


NEP2020யானது Cluster Resource Center (CRC) பயிற்சி என்ற பணியிடைப் பயிற்சியை Continuous Professional Development (CPD) பயிற்சி என்று பெயர்மாற்றியதோடே அதற்குக் கூடுதல் முக்கியத்துவத்தையும் கட்டமைத்துள்ளது .

அதன்படி, ஆசிரியர்கள் - தலைமை ஆசிரியர்கள் - கல்வியாளர்கள் ஆண்டிற்கு குறைந்தது 50 மணி நேரம் CPD எனும் Continuous Professional Development பயிற்சியில் சுயவிருப்பத்தின் பேரில் கண்டிப்பாக (!) பங்கெடுத்துத் தங்களது தொழிற்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளது NEP2020. இப்பயிற்சிகளானது Face to Face (நேரடி) பயிற்சியாகவும், Online (இணைய வழியில்) பயிற்சியாகவும் மேற்கொள்ளப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னயேதுனு  புரிஞ்சதோயில்லயோ - Internet Signal இருக்குதோ இல்லையோ  Projector Screen-ல் YouTube வழியா Hi-tech Lab-ல் பயிற்சி அளிக்கப்பட்டு Online-ல் Test வைக்கப்பட்டு வருகிறதே. . . . அது முழுக்க முழுக்க இதன் அடிப்படையிலானதே.

அப்பறம் அந்த NISTHA அதாங்க, National Initiative for School Heads' and Teachers' Holistic Advancement தொடர்பான பயிற்சிகள் இரு நிலைகளில் 1.0 (Elementary level I-VIII) & 2.0 (Secondary level IX-XII) நடத்தப்பட்டு வருவதும் இந்த CPD-ன் ஒரு அங்கமே.

மொத்தத்துல அம்புட்டுபேரும் NEP2020க்குள்ளதேன் இருக்கோம். இதுல CRCனு பேருவச்சா என்ன? CPDனு பேருவச்சா என்ன? என்று எண்ணத்தோன்றலாம். . . டுவிஸ்ட்டே இந்த CPDக்குள்ளதான் இருக்கு. NEP2020 இந்த CPD என்ற சொல்லைப் பயன்படுத்தி அடுத்தடுத்த முடிச்சுகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்துப் போட்டுள்ளது.


அதாவது NEP2020ல், "இந்த CPD என்பது ஆசிரியர்களின் தொழில் மேலாண்மை மற்றும் முன்னேற்றத்தினை (CMP) மதிப்பிடும் மதிப்பீட்டுக்கூறுகளுள் ஒன்றாகும்.

CMP மதிப்பீடானது ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தரநிலைகளின் (NPST) அடிப்படையில் அமைக்கப்படும்.

2022-ல் வடிவமைக்கப்படும் NPST தரநிலையானது மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பணிக்காலம், சம்பள உயர்வுகள், பதவி உயர்வுகள் உட்பட ஆசிரியர் தொழில் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கும்.


மேலும், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளை  பதவிக்காலம் / பணிமூப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படாது மேற்கண்ட NPST அடிப்படையிலான CMP மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்யப்படும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலேயுள்ள 4 பத்திகளையும் புரியும் வரை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இனி இதன்படிதான் நாம் வார்க்கப்பட / வகுக்கப்படவுள்ளோம்.

அதன்படி, 2022-ல் வடிவமைக்கப்படவுள்ளதாக NEP2020ல் சுட்டிக்காட்டப்பட்ட NPST இறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதை 2023ல் CRCயை CPD என்று பெயர் மாற்றியதன் வழி புரிந்து கொள்ளலாம்.


மேலும், தற்போது Promotion-ல் புகுத்தப்பட்டுள்ள சிக்கல்கள் NPST-யை முன்வைத்து நியாயப்படுத்தப்படக் கூடும் என்பதோடு, வருங்காலங்களில் Increment, Incentive உள்ளிட்டவற்றிலும் NPST-யை முன்வைத்து புதிதுபுதிதாக சிக்கல்கள் உருவாக்கப்படக்கூடும் என்பதையும் யாவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மொத்தத்தில் CPD என்பது சொல் மாற்றம் அல்ல. பெருசா செய்யப்படப்போகிற செயலுக்கான அதிகாரப்பூர்வ முன்னோட்டம்

- செல்வ.ரஞ்சித் குமார்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H