கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நான்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஆறாம் தேதி விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிவிப்பு. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை 6.7.2023 ஒரு நாள் மட்டும் உதகை, கூடலூர் மற்றும் பந்தளூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உதகை, கூடலூர், பந்தலூர், கூடலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக மீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையின் இரு குழுக்கள் நீலகிரி மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை விரைந்தது.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.