நீங்கள் புதிய தம்பதி என்றால் புதிய ரேஷன் கார்டு வாங்க, உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி உள்ளிட்ட விபரங்களை அதிகாரிகள் உறுதி செய்து 30 நாட்களில் ரேஷன் கார்டு தருவார்கள். ஒவ்வொரு மாதமும் சுமார் 40000 பேர் விண்ணப்பித்து வருகிறார்கள்.
புதிய ரேஷன் அட்டை கேட்டு www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முன்பு ரேஷன் கார்டுகள் குறித்து சில விஷயங்களை பார்ப்போம். ரேஷன் கார்டில் மொத்தம் 5 வகைகள் உள்ளன. இதில் PHH ரேஷன் கார்டுக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் தருகிறர்கள். PHH - AAY கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களும் தரப்படுகிறது.
NPHH கார்டுதாரர்களுக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும். NPHH - s என்ற குறியீடு உள்ள ரேஷன்கார்டுக்கு சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும். ஆனால், அரிசி வழங்கப்படாது. ஆனால் NPHH - Nc என்று ரேஷன் அட்டையில் குறிக்கப்பட்டிருந்தால், அதை ஒரு அடையாளமாகவும், முகவரிக்கான சான்றாகவும் மட்டுமே பயன்படுத்த முடியும். ரேஷன் கடையில் எந்த பொருளும் வாங்க முடியாது.
சரி விஷயத்திற்கு வருவோம். புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பிப்பது எப்படி?
புதிதாக திருமணமானவர்கள், கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் தனியாக பிரித்து புதிய கார்டு வாங்க முடியும். அதற்கு, உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள உங்கள் பெயரை நீக்க வேண்டும். இதேபோல் உங்கள் மனைவியின் பெயரை அவர்களது ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக சரியான ஆவணங்களை (திருமண பதிவு சான்று அல்லது பிற சான்றுகள்) கொடுத்து ஆன்லைன் மூலம் நீக்கிக் கொள்ள முடியும்.
அதன்பிறகு தேவையான ஆவணங்கள்: குடும்ப தலைவரின் புகைப்படம் வேண்டும், தற்போதைய ரேஷன் கார்டு அல்லது பெயர் சேர்த்தல் நீக்குதல் கார்டு. வீட்டு வரி ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் மற்றும் எரிவாயு இணைப்பு ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
எல்லா ஆவணங்களையும் உங்கள் கணிணியில் ஏற்றிக்கொண்டு, https://tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் ஒரு புதிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்ய கூறும். அதன் பிறகு குடும்பத்தலைவரின் பெயர் (Name of family head) என்ற பாக்ஸின் கீழ், தமிழிலும், ஆங்கிலத்திலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.
அதன் பிறகு உங்களின் முகவரி, உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களுடைய செல்போன் எண், மெயில் ஐடி போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். அடுத்து, விண்ணப்பத்தில் குடும்ப தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் அட்டை தேர்வு என்ற பாக்ஸில் உங்களுக்கு தேவையான அட்டை வகையினை தேர்வு செய்யுங்கள்
அதன் பிறகு இருப்பிட சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 1 எம்பி அளவிற்குள் இருக்க வேண்டும். இதற்காக கேஸ் பில், டெலிபோன் பில், தண்ணீர் பில் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும்.
பின்னர் உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் முதலாவதாக குடும்ப தலைவர் பெயரை கொடுக்க வேண்டும். அதில் ஏற்கனவே நாம் கொடுத்த விவரங்கள் இடம் பெறும். மேலும், பிறந்த தேதி, ஆண் பெண், வருமானம், ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். கடைசியாக ஸ்கேன் செய்த ஆதார் கார்டினை பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்லோட் செய்த பிறகு உறுப்பினர் சேர்க்கை சேமி என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்ததாக குடும்பத்தின் பிற உறுப்பினர்களை அதாவது மனைவி, குழந்தை ஆகியோரின் பெயரை சேர்க்க வேண்டும். உறுப்பினரின் பெயர், குடும்ப தலைவருக்கு என்ன உறவு? அதாவது மகன், மகள், மனைவி அல்லது கணவன் என்பதை தெளிவாக பார்த்து கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் கேஸ் இணைப்பு பற்றிய விவரங்கள் என்பதன் கீழ், கேஸ் இணைப்பில் பதிவு செய்யப்பட்ட உங்களின் பெயர் கொடுக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் விவரங்கள் சரியானதா என்பதை பார்த்து, பதிவு செய் என்பதை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் கொடுத்த விவரத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அது சிவப்பு நிறத்தில் காண்பிக்கும். ஆக அதனை சரியாக கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியானவை எனில் உறுதிசெய்வதற்கான ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். உங்களது ரேஷன் கார்டு விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது தகவல் மற்றும் ஒரு குறிப்பு எண் திரையில் தோன்றும். அதனை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ரேஷன் கார்டு ஓரிரு மாதங்களில் கிடைக்கும்.இதுகுறித்து https://tnpds.gov.in/ என்ற ஆன்லைனிலேயே அறிய முடியும்.
இதேபோல் தொலைந்து போன ரேஷன் கார்டினையும் சில நடைமுறைக பின்பற்றி வாங்க முடியும். அதற்கு குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் கூடிய பழைய குடும்ப அட்டை நகல், நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் தான் வசிக்கிறீர்கள் என்பதை உறுதி செய்வதற்கான சான்றிதழ் ஏதாவது ஒன்றை சமர்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை (வசிக்கும் முகவரி இருக்க வேண்டும்)
பாஸ்போர்ட்,
சொந்த வீடு உள்ளவர்கள் சொத்து வரி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் அல்லது மின் கட்டண ரசிது அல்லது கேஸ் சிலிண்டர் பில் ரசிசு
லீசுக்கு குடியிருக்கிறீர்கள் என்றால் வாடகை ஒப்பந்தம் அதாவது லீசு ஒப்பந்தம் இருக்க வேண்டும்.
வாக்காளர் அடையாள அட்டை, தொலைப்பேசி பில், வங்கி கணக்கு பாஸ் புத்தகத்தின் முதல் பக்கம் என ஏதாவது ஒரு சான்றிதழ் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆதார் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆதாருடன் இருப்பிட சான்றிதழை நிரூபிக்க தேவையான ஏதாவது ஒரு ஆவணம் இருந்தால் ஒரு மாதத்திற்குள் நீங்கள் புதிய ரேஷன் கார்டை பெற்றுவிட முடியும். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேராக சென்று, உங்கள் குடும்ப அட்டை எப்போது தொலைந்தது என்பது குறித்து கடிதம் எழுதி கொடுக்க வேண்டும். அத்துடன் தேவையான ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். ஒருவேளை குடும்ப அட்டை அதாவது ஸ்மார்ட் கார்டு உடைந்துவிட்டது என்றாலும் அதையும் சமர்பித்து புதிய அட்டையை பெறலாம். ஒருவேளை குடும்ப அட்டை நகல் இல்லை என்றால், இணையத்தின் மூலம் குடும்ப அட்டையை நகல் எடுத்து அதை சமர்பியுங்கள். அவர்கள் உங்களுககு தற்காலிகமாக 10 இலக்க எண்களை உங்களுக்கு வழங்குவார்கள். அதன் மூலம் நீங்கள் புதிய ரேஷன் கார்டு வரும் வரை பொருட்களை வாங்கி கொள்ளலாம். அதன்பிறகு புதிய குடும்ப அட்டை உங்கள் முகவரிக்கு வந்துவிடும்.
ஒருவேளை ஆன்லைனிலேயே தொலைந்த குடும்ப அட்டை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், அதற்கும் வழி உள்ளது.. இதன்படி, உங்கள் ரேஷன் அட்டை தொலைந்து போயிருந்தாலோ அல்லது ஊர் மாற்றம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட அதற்கான கட்டணம் ரூ.20 மற்றும் தபால் சேவை கட்டணம் ரூ.25 ஆக மொத்தம் 45 ரூபாயை இணையவழியில் கியூ.ஆர். கோடு அல்லது நெட் பாங்கிங் வழியாக செலுத்தினால் புதிய ரேஷன் கார்டுகளை தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியை உங்கள் மொபைல் அல்லது கணிணியில் சொடுக்குங்கள். உள்ளே சென்றால், வலது புறத்தில் நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணபிக்க என்று இருக்கும்.அதை கிளிக் செய்யுங்கள்.அதில் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை கொடுங்கள். அதில் கேப்ட்சா குறியீடு இருக்கும் அதை கொடுத்து உள்ளே செல்லுங்கள்.உள்ளே சென்று விண்ணபித்து குடும்ப அட்டை நகலை பெறலாம். அதற்கு கட்டணம் செலுத்த கேட்கும். அதற்கான தொகையை ஆன்லைனிலேயே யுபிஐ அல்லது வங்கி கணக்கு மூலம் செலுத்தினால், உங்கள் வீட்டிற்கே நகல் குடும்ப அட்டை வந்துவிடும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...