கவனத்திற்குள் வராத கணிதத் தேர்வும்-ஒட்டு மொத்த கணித ஆசிரியர்களின் ஆதங்கமும்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 11 April 2014

கவனத்திற்குள் வராத கணிதத் தேர்வும்-ஒட்டு மொத்த கணித ஆசிரியர்களின் ஆதங்கமும்:

தமிழகத்தில் இன்றுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்தது.மடைதிறந்த வெள்ளம் போல் மாணாக்கர்கள் தேர்வு முடிந்தவுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் தேர்வறையை விட்டு வெளியேறினர்.தன்னுடைய இளமை காலத்தில் சந்திக்கும்  முதல் பொதுத்தேர்வு என்பதால் சற்று பதற்றத்துடனும் பயத்துடனும் தேர்வை சந்தித்தனர்.
அனைத்துப்  பாடங்களும் எளிமையாகவும் புத்தகத்தில் உள்ள கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டது.(கணிதத்தைத்  தவிர) கணித பாடத்தில் வழக்கமான கேள்விகளான இயற்கணித பாடத்தில் இருந்து வர்க்கமூலம்.காரணிப்படுத்துதல்  மற்றும் கணங்களில்-சார்புகளில்  இருந்து அம்புக்குறிபடம் கேட்கப்படவில்லை.இதனால் 15 மதிப்பெண்கள் பெறுவது கிராமப்புற  மாணவர்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தியது.தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படித்த பெற்றோர்கள் கவனமுடன் தன் பிள்ளைகளை கவனிக்கின்றனர் மற்றும்  ,அரசின் விதிகளுக்கு உட்படாத பயிற்சி வகுப்புகள். ஆனால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களில்  75%பெற்றோர்கள் வறுமையின் காரணமாக இடம் பெயர்ந்து வெளியூரில் கூலி வேலை பார்க்கின்றனர் இவர்களை கவனிப்பதற்கு ஆள் இல்லாத பட்சத்தில்,உணவு கூட அருந்தாமல் பள்ளிக்கு வருகின்றனர் . இவர்களை எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் நாங்கள் பாடம் நடத்துகின்றோம்.சென்டம் எடுப்பதற்கு ஒவ்வொரு கணித ஆசிரியரும் போராடுகின்றோம். ஆனால் தற்பொழுது நடந்து முடிந்த கணிதத்  தேர்வில் அரசுப்பள்ளி  மாணவர்கள் சென்டம் பெறுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்ற ஆண்டும் அனைத்து பாடங்களும் எளிமையாக இருந்தது ஆனால் கணிதத்தில் வரையறுக்கப்பட்ட கேள்வித்தொகுப்பில்(Blueprint)ன் படி கேள்விகள் இல்லை ஆகையால் 10மதிப்பெண்கள் தரப்பட்டது.இந்த ஆண்டு (Blueprint)ன் படி எடுக்கப்பட்டது ஆனால் எதிர்பார்த்த கேள்விகள் 5மதிப்பெண் வினாக்களில் இடம் பெறவில்லை.உதரணமாக ஒரு மாணவன் அனைத்து பாடங்களிலும் 90க்கு அதிகமான மதிப்பெண்கள் பெறுகின்றான் கணிதத்தில் மட்டும் 60 மதிப்பெண்கள் பெற்றால் அங்கு கணித ஆசிரியர் குற்றவாளியாக நிற்கின்றார். பொதுமக்களிடம் கேள்வித்தாளின் கடினத் தன்மையை எடுத்துக்கூறினாலும் அதனை கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. இது போன்ற கேள்வித்தாள் கணிதத்தில் கண்டிப்பாக தேவையான ஒன்றுதான் இருந்த போதிலும் மற்ற பாடங்களை பார்க்கும்பொழுது.கணித ஆசிரியர் எவ்வளவு உழைத்தும் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறுவது சற்று கடினமான செயலாக உள்ளது.ஒட்டுமொத்தமாக  கணித ஆசிரியர்களின் ஆதங்கம் என்னவென்றால் கடினமான கேள்வித்தாள்கள் இன்றைய மாணவர்களுக்கு கண்டிப்பாக தேவை ஆனால் அது அனைத்து பாடங்களுக்கும் பொருந்த வேண்டும்.வருங்காலத்திலாவது இதுபோன்ற நிகழ்வுகள் மாற்றியமைக்கப்படவேண்டும் என்பது ஒட்டு மொத்த கணித ஆசிரியர்களின் ஆவல்....
ஆக்கம் 

P.VISWANATHAN  
B.T ASST(MATHEMATICS)
GOVT HIGH SCHOOL
THENGIYANATHAM
VILLUPURAM D.T
PIN-606201 
M.PANNERSELVAM
B.T ASST(MATHEMATICS) 
GOVT BOYS HRSEC SCHOOL
CHINNASALEM
VILLUPURAM DT
PIN-606201

1 comment:

  1. sir nanun oru maths staff edu amdiri kashtam enakum iruku, na matum dan kashtapadaranu nenaicha ana elam maths staff kashta padradu nenaicha nama elam pavam matha subject madiri illa, anala nama dan king maker of student, idu matum dan perumai. thank you sir

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H