கடலின் ஆழத்தை
கண்டறிவதற்கு அறிவியல் துறையில் கருவிகள்கண்டறியப்பட்டுள்ளன...ஆழ்மனதின் உணர்வுகளை
கண்டறியவும் மெஸ்மர் மருத்துவ
உளவியல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன....அதைவிடவும் 76ஆண்டுகளுக்கு
பின் வரப்போகும் ஹேலி வால்நட்சத்திரம் பற்றியும் அறிவதற்கு கூட புவியியல் ஆய்வுகள்
வந்துள்ளன.....
ஆனால் இந்த
2013 ஆசிரியர் தகுதித்தேர்வு பற்றியும் ..... எத்தனை பணியிடம் என்றும் புரியாத புதிராகவும்
....அறியாத மர்மமாகவுமே இருந்து வருகிறது, தினம் தினம் திகில்படம் பார்ப்பது போல் பீதி.....
இதுபோதாதென்று
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களோ ஒரு இடத்தில் 15,000 பணியிடம் என்றும்,இன்னொரு
இடத்தில் 20,000 பணியிடம் என கூறிவந்தார்...பின்னர் தன்னுடைய அறிக்கையில் 13,777 பணியிடம்
நிரப்பப்படும் என தெரிவித்து இருக்கிறார்.....
ஆதிதிராவிட பழங்குடியினர்
நலவாழ்வுத்துறை அமைச்சர் அவர்களோ அவர் பங்குக்கு 1,408 ஆசிரியர்பணியிடம் விரைவில் நியமிக்கப்படும்
என கூறிவிட்டார்....பின்னர் பத்திரிக்கை துறையோ "டிஆர்பி நிர்வாகம் அறிவித்த
10,762 பணியிடங்கள் 2 அல்லது 3 வாரங்களில் பணியமணம் செய்யப்படும் என வெவ்வேறு மாவட்டப்பதிப்புகளில்
வெவ்வேறு தகவலை கூறி வருகின்றன.....
ஐயகோ ஐயகோ எதைத்தான்
நம்புவதோ பேதை மனமே!!!!!!
மேலும் மேற்கண்ட
கூடுதல் பணியிடங்கள் நமக்கு சேர்க்கப்படும் என்றும்,நமக்கு விடிவுகாலம் பிறக்குமென்று
காத்திருந்த தேர்வர்களின் மத்தியில் இன்றிலிருந்து ஒருசில கதறல்களும் கலக்கங்களும் என் காதுகளுக்கு
வருகின்றன.....
கடவுளே 72,711
ஆசிரியர்களுக்கும் எதையும் தாங்கும் இதயம் கொடு.....மேலும் வரும் 30ம் தேதிக்குள் நல்ல
ஆசி கொடு.......
இப்படிக்கு பக்தனின்
கண்ணீர் வேண்டுதல்......
by
P.Rajalingam
puliangudi..Tirunelveli
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...