இந்தியாவிலேயே முதல் முறையாக நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

POST HOME AD

Post Top Ad

Sunday, 11 August 2019

இந்தியாவிலேயே முதல் முறையாக நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை

👉நாட்டிலேயே முதல் முறையாக கோல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவையை துவக்குவதற்கானபணிகள் நடந்து வருகிறது. இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், இது குறித்து பிரதமர் மோடி, இந்த பணியில் ஈடுபட்டுள்ள இன்ஜினியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்மேலும், "நீருக்கு அடியில் ரயில் பாதை அமைப்பது என்பது தலைசிறந்த இன்ஜினியரிங் பணிக்கு ஒரு எடுத்துக்காட்டு நாட்டின் ரயில்வேயின் வளர்ச்சிக்கு அடையாளமாக இந்த ரயில் இருக்கும் இதனால் கோல்கத்தாவாசிகள் நிம்மதியாகவும், நாட்டு மக்கள் பெருமையாகவும் உணர்வார்கள்என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த ரயில் பாதையில் ஆற்று நீர் உள்ளே கசியாத அளவிற்கு 4 பாதுகாப்பு அடுக்குகள் அமைக்கப்பட்டுள்ளது 16 கி.மீ., தூரத்திற்கு போடப்பட்டுள்ள இந்த ரயில் பாதை உப்பு ஏரி பகுதி மற்றும் அவுரா உப்பு ஏரி மைதான ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும். 5 நிறுத்தங்கள் கொண்ட இந்த ரயில் சேவை முதல் 5 கி.மீ., வரை இம்மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad