இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை - புதிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் அமைச்சர் மாறியுள்ளார். புதிய அமைச்சராக ஆர்.பி.உதயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகஅமைச்சரவையில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் மாற்றங்களில் தற்போது மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ள ஆர்.பி.உதயக்குமார், வரும் புதன்கிழமை பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு சிறிதுகாலமே, அத்துறைக்குப் பொறுப்பு வகித்து வந்த
கே.வி.ராமலிங்கம் அமைச்சரவையிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். அந்தத் துறை
தற்போது ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைகளில்
தொடர்ச்சியாக அமைச்சர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், உயர்கல்வித் துறை
அமைச்சராக பொறுப்பு வகிக்கும் பழனியப்பன் மட்டுமே, அத்துறையில் தொடர்ந்து
நீடித்து வருவது நினைவு கூறத்தக்கது.
இதுவரை பள்ளிக் கல்வித்துறைக்கு, சி.வி.சண்முகம், என்.ஆர்.சிவபதி, அக்ரி
கிருஷ்ண மூர்த்தி, வைகை செல்வன், பழனியப்பன் ஆகியோர் பொறுப்பு வகித்து,
தற்போது கே.சி.வீரமணி அத்துறை அமைச்சராக உள்ளார்.