இந்திய மாணவர்களை ஈர்க்க உதவித்தொகை வழங்கும் அயர்லாந்து:
இந்தியாவிலிருந்து வந்து அயர்லாந்தில் படிப்போரில், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு உதவும் வகையில், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கான உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகை திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளதன் மூலம், சம்பந்தப்பட்ட
மாணவர்களின் மீதான எங்களின் அக்கறையை தெரிவித்து, அயர்லாந்து மற்றும்
டப்ளின் பல்கலைக் கல்லூரியில்(UCD) சென்று படிக்க வேண்டுமென்று அவர்கள்
விரும்புகையில், அவர்களுக்கு ஏற்படும் தடைகளை குறைக்க முடியும் என்று
தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
26,000 மாணவர்களைக் கொண்ட தனது வலுவான மாணவர் அமைப்பில், டப்ளின்
பல்கலைக் கல்லூரி தற்போது 260 இந்திய மாணவர்களைக் கொண்டுள்ளது. இக்கல்வி
நிறுவனத்தில் மொத்தமாக 5,500 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள்.
இதனால்தான், இக்கல்வி நிறுவனம், உலகளாவிய பல்கலைக்கழகம் என்ற பெயரைப்
பெற்றுள்ளது.
அனைத்துப் படிப்புகளிலும், தற்போது இருக்கும் வெளிநாட்டு மாணவர்களின்
எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள்
விரும்புகிறோம். மேலும், இந்திய மாணவர்கள் அதிகம் தேர்வு செய்யாத
படிப்புகளை எதிர்காலத்தில் அதிகம் தேர்வு செய்ய வேண்டும் என்றும் நாங்கள்
முயற்சிக்கிறோம் என்று அக்கல்வி நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.