தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:உரிமையியல்
நீதிபதி பதவியில் (2013&14ம் ஆண்டுக்கான) காலியாக உள்ள 162 பணியிடத்தை
நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 1, 2ம் தேதி நடந்தது.மேற்படி
பதவிக்கான விண்ணப்பதாரர்கள் இணையதள வழியிலான விண்ணப்பங்களில்
தெரிவிக்கப்பட்டுள்ள விவரங் களை சரிபார்க்கும் பொருட்டும், விவரங்கள் உண்மை
தன்மையினை அறியும் பொருட்டும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு 590
விண்ணப்பதாரர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 4ம் தேதி முதல் 6ம் தேதி வரையும், 9ம் தேதி
முதல் 11ம் தேதி வரை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமையகத்தில்
நடைபெறும்.
விண்ணப்பதாரருக்கான அழை ப்பு
கடிதம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளது.
அழைப்பு கடித த்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்து
(ஷ்ஷ்ஷ்.tஸீஜீsநீ.ரீஷீஸ்.வீஸீ)
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்பு கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.