எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, உள்ளி ட்ட முதுநிலை
பட்டப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடப்பதை அடுத்து பொது
நுழைவுத் தேர்வு தேதியை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.அண்ணா
பல்கலை நடத்தும் முதுநிலை பட்டப் படிப்புகளான எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ,
எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்கள்
சேர்க்கை நடப்பதை அடுத்து, பொது நுழைவுத் தேர்வு(டான்செட்) நடத்தவும் அண்ணா
பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. இந்த படிப்புகளில் சேர்ந்து படிக்க
விரும்பும் மாணவர்கள் நேரடியாகவும், இணைய தளம் மூலமாக வும் தங்களை பதிவு
செய்து கொள்ளலாம். பொது நுழைவுத் தேர்வு நடக்கும் தேதியை அண்ணா பல்கலைக்
கழகம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.
இதன்படி,
எம்.சி.ஏ படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே 15ம் தேதி காலை 10 மணி முதல்
மதியம் 12 மணிவரையும் நடக்கும். எம்.பி.ஏ படிப்புக்கான தேர்வு மேற்கண்ட
தேதியில் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடக்கிறது.
எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகியவற்றுக்கான தேர்வுகள் மே 17ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரையும் நடக்கிறது.
மாணவர்கள்
ஏப்ரல் 1ம் தேதி நேரடியாகவும், இணைய தளம் மூலமாக வும் பதிவு செய்து
கொள்ளலாம். ஒருங்கிணைப்பு மைங்களில் நேரடியாவும், இணைய தளம் மூலமாகவும்
பதிவு செய்து கொள்ள ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாள். மேற்கண்டபடி
விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஏப்ரல் 22ம் தேதி கடைசி நாள்.
இது குறித்து மேலும் விவரங்கள் வேண்டுவோர்
ஷ்ஷ்ஷ்.ணீஸீஸீணீuஸீவீஸ்.மீபீu/tணீஸீநீமீt2015
என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.