வயது வரம்பு:
கல்வித்தகுதி:
என்ஜினீயரிங் படிப்பில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெட்டலர்ஜி, எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், செராமிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைனிங், கெமிக்கல் பிரிவுகளில் பட்டப்படிப்பை 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் எம்.சி.ஏ. படித்தவர்கள் டெக்னிக்கல் பிரிவு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப் படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, எம்.பி.ஏ படித்தவர்கள் மற்றும் எச்.ஆர்., பெர்சனல் மேனேஜ்மென்ட், இண்டஸ்ட்ரியல் ரிலேசன்ஸ், மார்க்கெட்டிங், புரொடக்சன், ஆபரேஷன்ஸ், மெட்டீரியல்ஸ், லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின்மேனேஜ்மென்ட், சி.ஏ. போன்ற முதுகலை டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் அட்மினிஸ்ட்ரேசன் பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க முடியும். விருப்பமும், தகுதியும் உடையவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் படித்துவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 18-3-15-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். ஆன்லைன் பதிவை தொடங்க லாக்இன் முகவரி மற்றும் பாஸ்வேர்டு உருவாக்கிக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும். இறுதியில் சமர்ப்பித்த விண்ணப்பத்தை, பிற்கால பயன்பாட்டிற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்வது அவசியம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி நாள் : 18-3-15, எழுத்து தேர்வு நடைபெறும் (உத்தேச) நாள் : 10-5-15
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை அறியவும் www.sail.co.in மற்றும் www.sailcareers.com ஆகிய இணையதளங்களை பார்க்கலாம்.








