இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய நிறுவனங்களில் ஒன்று ஹெவி வாட்டர் போர்டு. அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 167 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிரெயினி (கேட்டகரி 1) பணிக்கு (62 இடங்கள்) டிப்ளமோ என்ஜினீயர்களும், டிரெயினி (கேட்டகரி 2) பணிக்கு (105 இடங்கள்) ஐ.டி.ஐ. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதிகள் இனி...
டிரெயினி (கேட்டகரி 1) விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். டிரெயினி (கேட்டகரி 2) விண்ணப்பதாரர் 22 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 1-1-2015 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிஸ்ட்ரி (லேபராட்டரி) மற்றும் இவை சார்ந்த பிரிவுகளில் என்ஜினீயரிங் டிப்ளமோ சான்றிதழ் பெற்றவர்கள் டிரெயினி (கேட்டகரி1) பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மெக்கானிக்கல் (பிட்டர்) எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், பிராசஸ், பிளாண்ட் ஆபரேட்டர் போன்ற பணிகள் சார்ந்த பிரிவில் ஐ.டி.ஐ. 2 ஆண்டு சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் டிரெயினி (கேட்டகரி2) பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, திறமைத் தேர்வு, நேர்காணல் ஆகிய வற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்றோர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.20 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 16-3-15-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.
விரிவான விவரங்களை www.hwb.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.








