19-ம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் ஆயிரக்கணக்கில் மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை, வாக்களிக்கும் உரிமை முதலியவற்றை வலியுறுத்தி கிளர்ந்தெழுந்து போராடினர்.
பெண்கள் முன்னேற்றத்தில் தி.மு.க. பங்கு
தமிழகத்தில் 1967-ம் ஆண்டிலும், அதன் பின்னரும் அமைந்த தி.மு.க. அரசு, மகளிர் சமுதாய மேன்மைக்கு மகத்தான பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது.
அதன் விளைவாகத்தான் இன்று எங்கும், எல்லா அலுவலகங்களிலும், எல்லா துறைகளிலும், எல்லா கலைகளிலும் பெண்கள் பங்குபெற்றுப் பயனடைந்து முன்னேற்றம் கண்டு சாதனைகள் பல படைத்து பெருமைகளை குவித்து வருகிறார்கள் என்பதனை எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றி, அரசுத் துறைகளிலும், அரசியல் களங்களிலும், தொழில் முறைகளிலும் பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவையான அடித்தளங்கள் பலவற்றை வலுவாக அமைத்து தந்துள்ளது தி.மு.க. என்பதனை நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல நமக்கு உரிமை உண்டு.
மனித குலத்தின் மகத்தான சக்தி
2011-க்கு பிறகு, எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி, பெண்கள் பாதுகாப்பின்றி பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதனை இவ்வேளையில் வேதனையுடன் நினைவுகூரும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
மனித குலத்தின் மகத்தான சக்திகளில் ஒன்றாக திகழும் மகளிர்க்கு எதிரான இத்தகைய கொடுமைகள் முற்றிலும் அகற்றப்பட தி.மு.க. அரசு காலத்தில் தொடங்கப்பட்ட பெண்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி தொடர்ந்திட, எங்கும் எதிலும் ஆண்களுக்கு இணையான சமத்துவம் நிலவச் செய்திட உலக மகளிர் நாளில் உறுதியேற்போம். தமிழக மகளிர் அனைவர்க்கும் “உலக மகளிர் நாள்” நல்வாழ்த்துகளை உரித்தாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நன்றி தினத்தந்தி








