மருத்துவ மேற்படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஏப்ரல் 29-ம் தேதி துவங்குகின்றது.
மேற்படிப்புகளுக்கென்று தமிழகத்தில் 12 அரசு மருத்துவக்
கல்லூரிகள் இயங்கி வருகின்றது. அதில், எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்.,
மற்றும் டிப்ளமோ படிப்புகள் ஆகிய மருத்துவ மேற்படிப்புகள் வழங்கி
வருகின்றன. மாநில ஒதுக்கீட்டின் கீழ் அரசு கல்லூரிகளில் 595 இடங்களும்,
சுயநிதி கல்லூரிகளில் 200 இடங்கள் உள்ளன.
மார்ச் 23-ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியது.
இந்த கலந்தாய்வில் 80 சதவீத இடங்கள் நிரம்பின. மீதமுள்ள இடங்களுக்கான
இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறுகிறது.








