பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியில்
சேர வேண்டும் என முடிவு செய்வபர்கள், இளநிலை பட்டப் படிப்பை முடித்து
பின்னர் பி.எட். படிப்பை தனித் தனியாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அவ்வாறு பட்டப் படிப்பு முடித்து முயற்சிக்கும்
பலருக்கு அரசுக் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான இடம் கிடைப்பது சவாலாக
இருந்து வருகிறது. நன்கொடை கொடுத்து தனியார் கல்லூரிகளில் படிக்கும்
நிலைதான் ஏற்படும்.
இந்தச் சிக்கலை தவிர்க்க பிளஸ்-2 முடித்தவுடன்
ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட். படிப்பை மேற்கொள்ளலாம் என்கின்றனர்
பேராசிரியர்கள்.
இந்தப் படிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மத்திய அரசின் மண்டல கல்வி நிறுவனத்தில் (ஆர்.ஐ.இ.) மட்டுமே வழங்கப்படுகிறது.
இங்கு ஃபிசிக்கல் சயின்ஸ், பயோலஜிக்கல் சயின்ஸ் ஆகிய
இரண்டு பிரிவுகளின் கீழ் இந்த ஒருங்கிணைந்த பி.எஸ்சி.,பி.எட். படிப்பு
வழங்கப்படுகிறது. இந்த இரண்டு பிரிவுகளுக்கும் சேர்த்து தலா 30 இடங்கள்
வீதம் மொத்தம் 60 இடங்கள் மட்டுமே உள்ளன.
தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 15 சதவீதம், பழங்குடியினப்
பிரிவினருக்கு 7.5 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27
சதவீதம், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் என்ற விகிதத்தில் இடங்கள்
நிரப்பப்படும்.
தமிழகம், புதுவை, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும்
லட்சத் தீவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மைசூர் ஆர்.ஐ.இ.-யில் வழங்கப்படும்
இந்த படிப்பில் சேர விண்ணப்பிக்க முடியும்.
பொது நுழைவுத் தேர்வு:
இந்த படிப்பில் பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே
மாணவர் சேர்க்கை நடத்தப்படும். 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான
நுழைவுத் தேர்வு வருகிற ஜூன் 7-ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட
உள்ளது.
இதற்கு www.rieajmer.raj.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பக்க வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய மே 11 கடைசித்
தேதியாகும். தேர்வறை அனுமதிச் சீட்டை மே 14-ஆம் தேதி முதல் பதிவிறக்கம்
செய்யலாம். நுழைவுத் தேர்வு ஜூன் 7-ஆம் தேதி நடத்தப்படும். தேர்வு
முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.








