எம்.பி.ஏ படிப்புக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் ஒற்றை சாளர முறையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.
2015-16 கல்வியாண்டில் பாரதியார் பல்கலையில் எம்.பி.ஏ
படிப்புக்கு ஒற்றை சாளர (single window) முறையில் விண்ணப்பிக்கலாம். அதாவது
எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இதர கல்வி
நிறுவனங்களில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. பாரதியார் பல்கலையின்
மூலம் அண்ணா பல்கலை நடத்தும் கலந்தாய்வின் அடிப்படையில் மாணவர்கள் சரியான
கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி பயன்
பெறலாம். விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் விரிவான தகவல்களுக்கு
http://www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம் அல்லது 0422-2428274,
275 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.








