தமிழகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 6.11 லட்சம் பேர் சேர்ந்து உள்ளனர் என்று அதிகரி தெரிவித்தார்.
பெண்கள் சேமிப்பு
இந்திய பெண்கள் சேமிப்பு தினத்தையொட்டி, இந்திய தபால் துறையுடன் இணைந்து சீஷா தொண்டு நிறுவனம் இணைந்து நேற்று பெண்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கும் விழா நடந்தது. விழாவுக்கு சென்னை வட்ட போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். பின்னர் அவர், சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களுக்கு சேமிப்பு பாஸ் புத்தகத்தை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–பெண்கள் சேமிப்பு
இந்திய பெண்கள் சேமிப்பு தினத்தையொட்டி, இந்திய தபால் துறையுடன் இணைந்து சீஷா தொண்டு நிறுவனம் இணைந்து நேற்று பெண்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கும் விழா நடந்தது. விழாவுக்கு சென்னை வட்ட போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். பின்னர் அவர், சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களுக்கு சேமிப்பு பாஸ் புத்தகத்தை வழங்கினார்.
வட்டி விகிதம் அதிகரிப்பு
பெண்களிடையே சேமிப்பு பழக்கத்தை அதிகரிப்பதற்காக தபால் துறை பல்வேறு சேமிப்பு கணக்குகளை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நாடு முழுவதும் 25 லட்சம் கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.320 கோடி பணம் முதலீடாக பெறப்பட்டு உள்ளது.
இதன் மூலம் அகில இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. இதற்காக தபால் துறை உயர் அதிகாரிகள் தமிழக தபால் துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து உள்ளனர். அத்துடன் இந்த திட்டத்தில் நடப்பு நிதியாண்டான கடந்த ஏப்ரல் 1–ந்தேதி முதல் வட்டி விகிதமும் 9.1 சதவீதத்தில் இருந்து 9.2 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆம்புலன்ஸ் சேவை விரிவாக்கம்
தற்போது மதுரவாயலைச் சேர்ந்த 300 பெண்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பாஸ்புத்தகமும் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஆம்புலன்ஸ் சேவையையும் தபால் துறை கையாண்டு வருகிறது. அதன்படி சென்னையில் தாம்பரம், அம்பத்தூர், பரங்கிமலை மற்றும் அண்ணாநகர் மேற்கு ஆகிய 4 தபால் நிலையங்களில் தனியார் மருத்துவமனைகளில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இந்த சேவையை விரிவுப்படுத்துவதற்காக சென்னையில் மேலும் 18 தபால் நிலையங்களில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இறுதி முடிவு ஓரிரு நாட்களில் எடுக்கப்பட உள்ளது.
மைலாப்பூரில் ஏடிஎம்
தபால் அலுவலகம் வங்கி சேவையை போன்று அளிப்பதற்காக தியாகராயநகரில் ஏடிஎம் வசதியை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து மைலாப்பூர், அண்ணாரோடு, மவுண்ட், தாம்பரம் ஆகிய பகுதிகளில் ஏடிஎம் வசதியை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் மைலாப்பூரில் ஏடிஎம் வசதி தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெயகுமார் டேனியல் உள்ளிட்ட 300 பெண்கள் கைகுழந்தைகளுடன் ஆர்வமாக கலந்து கொண்டனர்.