இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்த
தினவிழாவையொட்டி பிரதமர் நரேந்திரமோடி விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டு
இருப்பதாவது:-
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு எனது
மரியாதையையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க அறிஞர்
அம்பேத்கர் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயத்தில் வாழ்கிறார். சமூக
நீதியை உருவாக்கியதில் அவரது அர்ப்பணிப்பான பணிகள் தனிச்சிறப்பு வாய்ந்தது.
சிறந்த வழக்கறிஞரான அவர், மேதையாகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். அவரது
கருத்துகளை வெளியிடுவதில் உறுதியாக இருந்தார். இந்திய அரசியலமைப்பு
சட்டத்தை உருவாக்கியதில் அவரது பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. தேச
நலனிற்காக அவர் சோர்வின்றியும் தன்னலமின்றியும் பாடுபட்டார். நாட்டின்
முன்னேற்றத்திற்காகவும் டாக்டர் அம்பேத்கரின் கனவை நிறைவேற்றவும் நம்மை
முழுமையாக அர்ப்பணிப்போம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.