மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொலைநிலைக் கல்வி இயக்கக மாணவர்களுக்காக மே மாதம்
நடைபெறவிருக்கும் இளங்கலை, முதுகலை, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சான்றிதழ்
படிப்பு, பட்டயப் படிப்பு, முதுகலை பட்டயப் படிப்பு, திறந்த வெளி
தொடக்கநிலை மற்றும் அடிப்படை நிலைப் படிப்புகள் மற்றும் பி.எட்,
தேர்வுகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதித்
தேதிகளும் மற்றும் தேர்வுகள் தொடங்கும் தேதிகளும் முடிவு
செய்யப்பட்டுள்ளன.
இளங்கலை பட்டப்படிப்புகள் (13இ பதிவெண் வரை) மற்றும்
பி.எட் (15 அ பதிவெண் வரை) விண்ணப்பங்களை அபராதமின்றி ஏப்ரல் 21 ஆம்
தேதியும், ரூ.100 அபராதத்துடன் ஏப்ரல் 28 ஆம் தேதியும் சமர்ப்பிக்கலாம்.
தேர்வுகள் மே மாதம் 16 ஆம் தேதி தொடங்குகிறது.
முதுகலை மற்றும் தொழிற்சார் பட்டப்படிப்புகள் முதலாம்
ஆண்டு (13இ பதிவெண் வரை) விண்ணப்பங்களை அபராதமின்றி 21 ஆம் தேதியும்,
ரூ.100 அபராதத்துடன் 28 ஆம் தேதியும் சமர்பிக்கலாம். தேர்வுகள் மே மாதம் 23
ஆம் தேதி தொடங்குகிறது.
எம்.பி.ஏ, எம்.சி.ஏ., சான்றிதழ் படிப்பு,
பட்டயப்படிப்பு, முதுகலை பட்டயப்படிப்பு, திறந்தவெளி தொடக்கநிலை மற்றும்
அடிப்படை நிலை பட்டப்படிப்புகள் (13இ பதிவெண் வரை) விண்ணப்பங்களை ஏப்ரல் 27
ஆம் தேதியும், ரூ.100 அபராதத்துடன் மே மாதம் 4 ஆம் தேதியும்
சமர்பிக்கலாம். தேர்வுகள் மே மாதம் 27 ஆம் தேதி தொடங்குகிறது.
14அ, 14இ, 15அ (பி.எட் நீங்கலாக) பதிவெண் கொண்ட
மாணவர்களின் அல்பருவப் படிப்புகளுக்கான தேர்வுகள் சம்பந்தபட்ட அனைத்துத்
தகவல்களும் பின்னர் தெரிவிக்கப்படும். தனித்தேர்வர்கள் தேர்வு
விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்க்க்ங்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம். அஞ்சல் மூலம் பெற விரும்புவோர் கூடுதல் தேர்வாணையர்
முகவரிக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் அனைத்து முதுகலை
பட்டப்படிப்புகள் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ பட்டப்படிப்புகள் பயிலும்
மாணவர்கள் தேர்வுக்கு முன்னர் தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வுக்கால
அட்டவணையை ஜ்ஜ்ஜ்.ம்ந்ன்க்க்ங்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வு
நுழைவுச்சீட்டில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அதிகாரியின்
சான்றொப்பம் பெற்று தேர்வுமையத்திற்கு எடுத்துச் செல்லவும்.
நுழைவுச்சீட்டுடன் மாணவர்கள் தங்களது சேர்க்கை அனுமதி அட்டை, பாஸ்போர்ட்,
ஓட்டுனர் உரிமம் அல்லது மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள
அட்டையுடன் சேர்த்து எடுத்துச் சென்று தேர்வு எழுதலாம் என்று கூடுதல்
தேர்வாணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.