
கவலைகள் இல்லாத மனிதர் ஒருவரின் சட்டையை வாங்கி ஒருநாள் அணிந்து கொண்டால் அரசரின் கவலை மறைந்து போகும் என்று துறவி கூறினார்.அரசரும் கவலைகள் இல்லாத மனிதர் ஒருவரை தேடினார். எதிரில் காண்போர்கள் அனைவரிடமும் அவர்களுக்கு கவலை இருக்கிறதா என்று கேட்க ஆரம்பித்தார்,எல்லோரும் தங்கள் கவலைகளை அடுக்க ஆரம்பித்தார்கள்.
“இவ்வளவு மகிழ்ச்சியாக பாடிக்கொண்டிருக்கிறாயே, உனக்கு ஏதாவது கவலை இருக்கிறதா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த பிச்சைக்காரன், “ கவலையா?, எனக்கென்ன கவலை. இந்த கோவிலின் வாசலில் எப்போதும் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்" என்றான்.
அரசன் மகிழ்ச்சி அடைந்தான்.
“உன் சட்டையை எனக்கு ஒருநாள் வாடகைக்கு தருவாயா?” என்று அவனிடம் அரசர் கேட்டார்."சட்டையா? எனக்கு ஏது சட்டை ?", என்றான் அந்த பிச்சைக்காரன்.கவலைகளற்ற மனிதர்கள் இந்த பூமியில் இல்லை. இயற்கையால் படைக்கப் பட்ட நிலாவில் கூட களங்கங்கள் உண்டு. நிலாவில் மறைந்திருக்கும் களங்கங்களை நம் கண்கள் பார்த்தால் நிலாவில் நிறைந்திருக்கும் அழகை இரசிக்க முடியாமல் போகிறது. என்ன நடந்தாலும் மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என முடிவெடுக்கும் போது மகிழ்ச்சியே நம் வாழ்க்கையின் வழியாக மாறிப்போய்விடுகிறது.