சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்:
சென்னை:பொது சுகாதாரத் துறையில், காலியாக உள்ள, 110 சுகாதார ஆய்வாளர்
பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில்நிரப்பப்பட உள்ளன. துப்புரவு ஆய்வாளர்,
டிப்ளமோ படித்தோர் இதில் சேரலாம்.'விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 23ம் தேதிக்குள், பொது சுகாதார
இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், விவரங்களையும் இணையதளத்தில் அறியலாம்' என, பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.